நாட்டைப் பாதுகாப்பது அனைவரினதும் பொறுப்பாகும்.
ஒவ்வொருவர் மீதும் குற்றங்களை சுமத்திக்கொண்டு நாடுகளைக் கட்டியெழுப்ப முடியாது என ஐக்கிய தேசியக் கட்சியின் தவிசாளரும் பாராளுமன்ற உறுப்பினருமான வஜிர அபேவர்தன தெரிவித்துள்ளார்.
நாட்டைக் கட்டியெழுப்ப அனைவரும் ஒன்றிணையாவிட்டால், அது எப்போதும் உலகின் முன் பிச்சை எடுக்கும் தேசமாக மாறும் என்றும் அபேவர்தன கூறினார்.
அனைவரும் ஏற்றுக்கொள்ளக்கூடிய தேசியக் கொள்கையொன்றை நாம் உருவாக்க வேண்டும் எனவும் எதிர்க்கட்சிகள் பொறுப்பை புறக்கணித்த போது சரிந்த நாட்டை ரணில் விக்கிரமசிங்க கைப்பற்றியதாகவும் தெரிவித்தார்.
ஐக்கிய தேசியக் கட்சியின் வருடாந்த மாநாடு தொடர்பில் கட்சி அமைப்பாளர்களுக்கு அறிவிக்கும் முகமாக கொழும்பில் நடைபெற்ற கூட்டத்தில் வஜிர அபேவர்தன மேற்கண்டவாறு தெரிவித்தார்.
No comments:
Post a Comment