Recent Posts

Search This Blog

ரேகிங் செய்த சிரேஷ்ட மாணவர்கள் குழுவினர்.. நேரடியாக பொலிஸ் நிலையத்திற்கு சென்று முறைப்பாடு செய்த பல்கலை மாணவன் - கைது செய்ய களத்தில் இறங்கிய பொலிசார் .

Monday, 31 October 2022

 சிரேஷ்ட மாணவர்கள் குழுவினர் தனக்கு பகிடிவதை அளித்ததாக குறிப்பிட்டு களனி பல்கலைக்கழகத்தின் இரண்டாம் வருட மாணவர் ஒருவர், கிரிபத்கொடை பொலிஸ் நிலையத்தில் முறைப்பாடு செய்துள்ளார்.


நேற்று தனது விரிவுரைகளின் பின்னர் விளையாட்டுப் பயிற்சிக்காக பல்கலைக்கழக விளையாட்டு திடலுக்கு சென்று கொண்டிருந்தபோது, சிரேஷ்ட மாணவர்கள் குழுவினால் தான் தாக்கப்பட்டதாக குறித்த மாணவர் முறைப்பாடு செய்துள்ளார்.


தாக்குதலின் போது சம்பவ இடத்தில் 7 மாணவர்கள் இருந்ததாகவும், அவர்கள் பெயர் தெரியவில்லை எனவும், நேரில் பார்த்தால் அடையாளம் காண முடியும் எனவும் சம்பந்தப்பட்ட மாணவர் பொலிஸாரிடம் குறிப்பிட்டுள்ளார்.


தாக்குதலுக்கு உள்ளான மாணவனை ராகம வைத்தியசாலையின் சட்ட வைத்திய அதிகாரி முன்னிலையில் பிரசன்னப்படுத்துவதற்கு நடவடிக்கை எடுத்துள்ள அதேவேளை, தொடர்புடைய மாணவர்களை கைது செய்வதற்கான விசாரணைகள் முன்னெடுத்துள்ளதாக கிரிபத்கொடை பொலிஸார் தெரிவித்தனர்.



No comments:

Post a Comment