சைக்கிளுக்கு போலியான
வாகன
இலக்கத்தகடை
காட்சிப்படுத்தி, எரிபொருள்
பெற்றுக்கொள்ள
முயற்சித்த இளைஞர்
கைதுசெய்யப்பட்டுள்ளார்.
நோர்வூட் நகரிலுள்ள
மஸ்கெலியா பல்நோக்கு
கூட்டுறவு எரிபொருள் நிரப்பும்
நிலையத்தில் வைத்தே அவர்
கைது செய்யப்பட்டார்.
அந்த எரிபொருள்
நிரப்பும் நிலையத்துக்கு
3,300 லீற்றர் பெற்றோல்
ஜூலை 23ஆம் திகதி வந்தது.
வாகன இலக்கங்களின்
இறுதி எண்களான
0,1,2 இலக்கங்களைக்
கொண்ட வாகனங்களுக்கு
மட்டுப்படுத்தப்பட்ட
அளவில் எரிபொருள்
வழங்க நடவடிக்கை
எடுக்கப்பட்டிருந்தது.
இந்த நிலையில் கம்பளை
பகுதியைச் சேர்ந்த 27
வயதுடைய இளைஞன், தனது
மோட்டார் சைக்கிளுக்கு
போலி வாகன இலக்கத்தகடை
பொருத்தி, எரிபொருளை
பெற்றுக்கொள்ள
முயற்சித்துள்ளார்.
அங்கு கடமையில் இருந்த
நோர்வூட் பொலிஸ் நிலைய
அதிகாரிகள் இருவர், வாகன
இலக்கத்தகடை பரிசோதித்த
அது போலியானதென
கண்டறிந்துள்ளனர்.
இதையடுத்து சந்தேகத்தின்
பேரில் அவர் கைது
செய்யப்பட்டு, பின்னர்
பொலிஸ் பிணையில்
விடுவிக்கப்பட்டார்.
நோர்வூட்
பிரதேசத்திலுள்ள
சுற்றுலா விடுதியொன்றில்
பணியாற்றும்
அவ்விளைஞனுக்கு எதிராக,
ஹட்டன் நீதவான் நீதிமன்றில்
வழக்கு தொடர நோர்வூட்
பொலிஸார் நடவடிக்கை
எடுத்துள்ளனர
No comments:
Post a Comment