பாதுகாக்கப்பட
வேண்டிய உயிரினங்களாகக்
கருதப்படும் பறவைகளை
சட்டவிரோதமாக வளர்த்து
வந்த பெண்கள் இருவர்,
கைதுசெய்யப்பட்டுள்ளனர்
என மாத்தளை ரஜ்ஜம்மன
வனஜீவராசிகள் அலுவலகம்
தெரிவித்துள்ளது.
வனஜீவராசிகள் திணைக்கள
அதிகாரிகளுக்கு கிடைத்த
தகவலுக்கமைய, மாத்தளை,
கவுடுபெலல்ல பிரதேசத்தில்
முன்னெடுக்கப்பட்ட
சுற்றிவளைப்பின் போது,
இருவரும் சந்தேகத்தின் பேரில்
கைதுசெய்யப்பட்டுள்ளனர்.
வனவிலங்குகள் பாதுகாப்பு
கட்டளைச் சட்டத்தை
மீறும் வகையில் குறித்த
பறவையினங்கள் கூடுகளில்
அடைத்து, சட்டவிரோதமாக
வளர்க்கப்பட்டுள்ளதாக
அதிகாரிகள் சுட்டிக்காட்டினர்.
கைதுசெய்யப்பட்ட
பெண்கள் இருவரும்,
மாத்தளை நீதவான் நீதிமன்றில்
ஆஜர்படுத்தப்படவுள்ளனர
No comments:
Post a Comment