மீண்டும் கொரோனா பரவல் காரணமாக முகக்கவசம்
அணிவதை காட்டாயமாக்குவது தொடர்பான விசேட கலந்துரையாடல் இன்று (25) சுகாதார அமைச்சில் நடைபெறவுள்ளது.
சுகாதார அமைச்சர் கெஹலிய ரம்புக்வெல்ல தலைமையில் தொற்றாநோய் நிபுணர்களின் பங்களிப்புடன் இது நடைபெறவுள்ளது.
புதிய கொவிட் ஒமிக்ரோன் வைரஸ் காரணமாக, அரசாங்க மருத்துவ அதிகாரிகள் சங்கம் மற்றும் சுகாதார வல்லுநர்கள் சங்கம் ஆகியவை முகக்கவசங்களை மீண்டும் கட்டாயமாக்குமாறு சுகாதார அமைச்சிடம் கேட்டிருந்தன.
கொவிட் நிலைமை சீரடைந்ததையடுத்து, முகக்கவசம் அணிவதை கட்டாயமாக்கியிருந்த உத்தரவை முன்னாள் சுகாதார அமைச்சர் சன்ன ஜயசுமண ரத்து செய்துள்ளார்.
இதேவேளை இலங்கையில் COVID-19 நோயாளர்களின் எண்ணிக்கை அதிகரித்து வருவதால், COVID-19 வைரஸுக்கு எதிராக வெக்சின்களை பெறுமாறு சுகாதார அதிகாரிகள் பொதுமக்களை வலியுறுத்தியுள்ளனர்.
இன்று வெக்சின் அடிக்கும் இடங்கள்
No comments:
Post a Comment