Recent Posts

Search This Blog

அடுத்த பொதுத்தேர்தலிலும் ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவே வெற்றிபெறும் – சாகர காரியவசம்!

Friday, 29 July 2022



அடுத்த பொதுத்தேர்தலிலும் ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுன கட்சியே வெற்றிபெறும் என கட்சியின் பொதுச்செயலாளர் சாகர காரியவசம் தெரிவித்துள்ளார். 


ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுன கட்சியின் தலைமையகத்தில் நேற்று(வியாழக்கிழமை) இடம்பெற்ற ஊடகவியலாளர்கள் சந்திப்பின் போதே அவர் இவ்வாறு குறிப்பிட்டுள்ளார்.


கோட்டாபய ராஜபக்ச இலங்கையர் எனவே அவர் நிச்சயம் நாடு திரும்புவார் எனவும் சாகர காரியவசம் தெரிவித்துள்ளார்.


சூழ்ச்சிமூலமே தங்களது தலைவர்கள் பதவிகளில் இருந்து நீக்கப்பட்டதாகவும், இந்த உண்மையை மக்கள் புரிய ஆரம்பித்துள்ளனர் எனவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.


எதிர்காலத்தில் ஆதாரங்களுடன் அவை நிரூபனமாகும் எனவும் சாகர காரியவசம் தெரிவித்துள்ளார்.


அடுத்த தேர்தலிலும் எமது கட்சிக்கே பெரும்பான்மை பலம் கிடைக்கும் எனவும் சாகர காரியவசம் நம்பிக்கை வெளியிட்டுள்ளார்.



No comments:

Post a Comment