Recent Posts

Search This Blog

சிறைச்சாலையில் மூளைக் காய்ச்சல் பரவும் அபாயம் - கைதிகள் இடமாற்றம்.

Wednesday, 27 December 2023


மாத்தறை சிறைச்சாலையில் மூளைக் காய்ச்சல் பரவும் அபாயம் உள்ளதால், மாத்தறை சிறைச்சாலைக்கு அழைத்து வரப்பட்ட கைதிகள் அங்குனுகொலபெலஸ்ஸ சிறைச்சாலைக்கு மாற்றப்படவுள்ளதாக சிறைச்சாலைகள் திணைக்களம் தெரிவித்துள்ளது.

ஆபத்தில் இருப்பதாக சந்தேகிக்கப்படும் மற்ற சிறைகளுக்கு மூளைக் காய்ச்சலுக்கான நுண்ணுயிர் எதிர்ப்பிகளை வழங்க முடிவு செய்யப்பட்டது.

இந்த வேலைத்திட்டம் விரைவில் அமுல்படுத்தப்படும் என சிறைச்சாலை சுகாதார சேவைகள் பணிப்பாளர் டொக்டர் ஹேமந்த ரணசிங்க தெரிவித்தார்.

மூளைக் காய்ச்சலுக்கான நுண்ணுயிர் எதிர்ப்பிகள் மாத்தறை சிறைச்சாலையின் கைதிகள் மற்றும் அதிகாரிகளுக்கும் வழங்கப்பட்டதாக அவர் கூறினார்.

போதைக்கு அடிமையானவர்களே இந்த நோயால் அதிகம் பாதிக்கப்படுகின்றனர்.

மாத்தறை சிறைச்சாலையில் நோய்வாய்ப்பட்ட பல கைதிகளிடம் இருந்து பெறப்பட்ட உயிர் மாதிரிகளில், ஒருவருககு மூளைக் காய்ச்சல் இருப்பது உறுதி செய்யப்பட்டது.


No comments:

Post a Comment