Recent Posts

Search This Blog

இன்று காலை இலங்கைக்கு அருகில் இரண்டு நில அதிர்வுகள் ஏற்பட்டன.

Thursday, 28 December 2023


இலங்கைக்கு அருகில் இரண்டு நில அதிர்வுகள் இன்றுகாலை ஏற்பட்டுள்ளன.

இந்தியப் பெருங்கடலில் இரண்டு நிலநடுக்கங்கள் பதிவாகியுள்ளதாக புவியியல் ஆய்வு மற்றும் சுரங்கப் பணியகத்தின் சிரேஷ்ட நில அதிர்வு நிபுணர் நில்மினி தல்தேன தெரிவித்தார்.

 இதில் முதல் நிலநடுக்கம் ரிக்டர் அளவுகோலில் 4.8 ஆகவும், இரண்டாவது நிலநடுக்கம் 5.8 ஆகவும் பதிவானதாக அவர் தெரிவித்தார்.

இதன் காரணமாக இலங்கைக்கு எவ்வித பாதிப்பும் இல்லை என புவியியல் ஆய்வு மற்றும் சுரங்கப் பணியகம் தெரிவித்துள்ளது.

இந்தியப் பெருங்கடலில் மாலைதீவுக்கு அருகில் இந்த நிலநடுக்கங்கள் பதிவாகியுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.


No comments:

Post a Comment