
பொதுமக்கள் பாதுகாப்பு அமைச்சர் டிரான் அலஸை தொலைபேசி அழைப்பின் ஊடாக அச்சுறுத்திய சம்பவம் ஒன்று பதிவாகியுள்ளது
ஜனாதிபதி ஊடக மையத்தில் இன்று இடம்பெற்ற செய்தியாளர் சந்திப்பின் போதே அவர் இந்த விடயத்தைக் குறிப்பிட்டார்.
அமெரிக்காவின் நியூயோர்க் நகரில் இருந்து அமைச்சர் டிரான் அலஸை தொடர்பு கொள்வதாக குறித்த தொலைபேசி அழைப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
ஏழு பூரணை தினங்களில் பார்த்துக்கொள்வோம் என இதன்போது தமக்கு அச்சுறுத்தல் விடுக்கப்பட்டதாகவும் அது வெளிநாட்டில் இருந்து கிடைக்கப்பெற்ற அழைப்பு என விசாரணைகளில் தெரியவந்துள்ளதாகவும் பொதுமக்கள் பாதுகாப்பு அமைச்சர் டிரான் அலஸ் தெரிவித்துள்ளார்
No comments:
Post a Comment