Recent Posts

Search This Blog

மொட்டில் இருந்து பிரிந்த டளஸ் அணி உறுப்பினர்கள் 6 பேர் ஐக்கிய மக்கள் சக்திக்கு !!

Friday, 22 December 2023




ஶ்ரீ லங்கா பொதுஜன பெரமுன கட்சியில் இருந்து பிரிந்து சென்று டளஸ் அழஹப்பெரும தலைமையில் புதிய கூட்டணி ஒன்றை அமைத்து செயற்பட்டு வந்த பாராளுமன்ற உறுப்பினர்கள் 6 பேர் விரைவில் ஐக்கிய மக்கள் சக்தியில் இணைந்துகொள்ள உள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது.


ஜி எல் பீரிஸ் , நாலக கொடஹேவா , டிலான் பெரேரா , வஸ்ந்த பண்டார , சன்ன ஜயசுமன, குமாரசிரி ஆகியோர் ஐக்கிய மக்கள் சக்தியில் இணைந்துகொள்ள உள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது.


ஜி எல் பீரிசுக்கு கட்சி உயர் பதவி ஒன்று வழங்கப்பட உள்ளதாக கூறப்படும் நிலையில் ஏனையோருக்கு அமைப்பாளர்கள் பதவி வழங்கப்படுவதாக கூறப்படுகிறது.


கடந்த நல்லாட்சி காலத்தில் டொக்டர் ஷாபி விடயத்தை கையில் எடுத்த சன்ன ஜயசுமனவை ஐக்கிய மக்கள் சக்தியில்

இணைக்க ஐக்கிய மக்கள் கூட்டணி கட்சி தலைவர்களான மனோ கணேசன் மற்றும் ரிஷாத் பதுர்டீன் கடும் எதிர்ப்பு வெளியிட்டுள்ளாதாக தகவல் வெளியாகியுள்ளது.



No comments:

Post a Comment