
அறிவிப்பவர் தொடர்பான இரகசியம் காக்கப்படும்
‘ஹரக் கட்டா’ என அழைக்கப்படும் நந்துன் சிந்தக விக்ரமரத்னவை தப்பிச் செல்ல திட்டம் தீட்டிய, பொலிஸ் கான்ஸ்டபிள் தொடர்பில் தகவல் அளிப்பவருக்கு ரூ. 25 இலட்சம் சன்மானம் வழங்கப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது.
பொலிஸ் தலைமையகம் இந்த அறிவிப்பை விடுத்துள்ளது.
குற்றப் புலனாய்வுத் திணைக்களத்தின் (CID) காவலில் வைக்கப்பட்டிருந்த ‘ஹரக் கட்டா’ எனப்படும் நந்துன் சிந்தக விக்ரமரத்ன எனும் சந்தேகநபரை, கடந்த 2023 செப்டெம்பர் 10ஆம் திகதி காவலில் இருந்து தப்பிச் செல்ல திட்டம் வகுத்திருந்த, குற்றப் புலனாய்வுத் திணைக்களத்தில் கடமையாற்றிய பொலிஸ் கான்ஸ்டபிள் ரவிந்து சந்தீப குணசேகர (97402) தற்போது தலைமறைவாகியுள்ளார்.
இதனடிப்படையில், இச்சந்தேக நபர் இருக்கும் இடத்தைக் கண்டறிய பொதுமக்களின் உதவி கோரப்பட்டுள்ளதுடன், இவரைப் பற்றி தகவல் அளிப்பவருக்கு ரூ. 25 இலட்சத்தை (ரூ. 2,500,000) பரிசாக வழங்க பொலிஸ் தலைமையகம் தீர்மானித்துள்ளது.
மேற்படி சந்தேகநபர் தொடர்பில் எந்தவொரு தகவலையும் வழங்கும் நபரின் இரகசியத்தன்மை பாதுகாக்கப்படும் எனவும், இவரைப் பற்றிய துல்லியமான தகவல்கள் தெரிந்தால் பின்வரும் தொலைபேசி இலக்கங்களுக்குத் தொடர்பு கொள்ளுமாறும் பயங்கரவாதத் தடுப்பு மற்றும் புலனாய்வுப் பிரிவு பொதுமக்களைக் கேட்டுக் கொண்டுள்ளது.
தொலைபேசி இலக்கங்கள் :-
பயங்கரவாத தடுப்பு மற்றும் புலனாய்வுப் பிரிவு
உதவி பொலிஸ் அத்தியட்சகர் : 071-8591960
பொறுப்பதிகாரி விசாரணைப் பிரிவு (I) : 071-8596150
No comments:
Post a Comment