இஸ்ரேலில் விவசாய வேலைகளுக்காக வேலைக்கு அமர்த்தப்பட்ட முதல் தொகுதி இலங்கையர்கள் அங்கு சென்றடைந்து விட்டதாக தெரிவிக்கபடுகிறது.
வேலை வாய்ப்புகள் தொடர்பாக இலங்கைக்கும் இஸ்ரேலுக்கும் இடையிலான இருதரப்பு உடன்படிக்கையின் ஒரு பகுதியாக, முப்பது (30) இலங்கையர்கள் குழுவொன்று திங்கட்கிழமை (டிசம்பர் 18) இஸ்ரேலுக்குப் புறப்பட்டது.
இரு நாடுகளுக்கும் இடையிலான இருதரப்பு உடன்படிக்கையின் பிரகாரம், அடுத்த சில வாரங்களில் 10,000 இலங்கையர்கள் இஸ்ரேலுக்கு அனுப்பப்பட உள்ளனர்.
இந்த வேலைகளுக்காக எந்தவொரு தரப்பினருக்கும் பணம் செலுத்த வேண்டிய அவசியமில்லை என தொழிலாளர் மற்றும் வெளிநாட்டு வேலைவாய்ப்பு அமைச்சர் மனுஷ நாணயக்கார வலியுறுத்தியுள்ளார்.
வெளிநாடு சென்ற பின்னர் யாராவது பணம் கொடுத்து இந்த வேலை வாய்ப்புகளை பெற்றுக் கொண்டது தெரியவந்தால் அவர்கள் மீண்டும் அழைத்து வரப்படுவார்கள் என்றும் அவர் எச்சரித்துள்ளார்.
வேலைக்காக பணம் செலுத்தியவர்களை நாடு திரும்புவது தொடர்பில் இரு அரசாங்கங்களும் இணக்கப்பாட்டுக்கு வந்துள்ளதாக அமைச்சர் நாணயக்கார மேலும் தெரிவித்தார்.
No comments:
Post a Comment