Fifa கால்பந்து உலகக்கோப்பை தொடர் 2026ஆம் ஆண்டு நடக்கவுள்ளது. இதில் ஆசிய மண்டல அணிகளுக்கான தகுதிச்சுற்றின் 2ஆம் கட்ட போட்டிகளில் மொத்தமாக 36 அணிகள் பங்கேற்றுள்ளன.
இதில் 9 பிரிவுகளாக பிரிக்கப்பட்டு லீக் போட்டிகளில் மோதவுள்ளது. இறுதியாக முதல் 2 அணிகளை பிடிக்கும் அணிகள் அடுத்தக்கட்ட தகுதிச்சுற்றுக்கு முன்னேறும்.
Fifa உலகக்கோப்பை தொடரில் ஆசிய மண்டல அணிகளுக்கு மொத்தமாக 8 இடங்கள் ஒதுக்கப்பட்டுள்ளது.
இதனால் முதல் 8 இடங்களில் ஒரு இடத்திற்காக இந்திய அணி போராடி வருகிறது. இந்திய அணியுடன் குரூப் பிரிவில் வலிமை வாய்ந்த கத்தார், ஆஃப்கானிஸ்தான் மற்றும் குவைத் அணிகள் இடம்பெற்றுள்ளன.
இந்த நிலையில் இன்று நடைபெற்ற ஆட்டத்தில் கத்தார் அணியை எதிர்த்து இந்திய அணி களமிறங்கியது.
ஆட்டத்தின் 4வது நிமிடத்தில் இந்திய அணி வீரர்கள் செய்த தவறு காரணமாக கத்தார் அணியின் மாஷல் முதல் கோலை அடித்து அசத்தினார்.
இதனைத் தொடர்ந்து கத்தார் அணி ஆக்ரோஷமான ஆட்டத்தை வெளிப்படுத்த, இந்திய அணி வீரர்கள் டிஃபென்ஸ் மனநிலைக்கு தள்ளப்பட்டனர்.
தொடர்ந்து நடைபெற்ற முதல் பாதி ஆட்டத்தில் இந்திய அணி வீரர்களால் எந்த கோலும் அடிக்க முடியவில்லை. இதனால் 1-0 என்ற கணக்கில் முதல் பாதி முடிவில் கத்தார் முன்னிலை பெற்றது.
பின்னர் தொடங்கிய இரண்டாம் பாதி ஆட்டத்தின் 2வது நிமிடத்திலேயே கத்தார் அணியின் அலி 2வது கோலை அடித்து அசத்த, அந்த அணி 2-0 என்ற கோல் கணக்கில் முன்னிலை பெற்றது. இதன்பின் இரண்டாம் பாதி ஆட்டத்தில் இந்திய அணி வீரர்கள் கோல் அடிக்க தீவிரமாக முயற்சித்து வந்தனர். ஆனால் எவ்வளவு முயன்றும் இந்திய அணியால் கோல் அடிக்க முடியவில்லை. 86வது நிமிடத்தில் மீண்டும் கத்தார் அணியின் யூசுப் மீண்டும் கோல் அடிக்க, கத்தார் அணி 3-0 என்ற கணக்கில் முன்னிலை பெற்றது.
இறுதியாக ஆட்ட நேர முடிவில் கத்தார் அணி 3-0 என்ற கோல் கணக்கில் இந்திய அணியை வீழ்த்தியது. ஏற்கனவே ஆஃப்கானிஸ்தான் அணியை கத்தார் அணி வீழ்த்திய நிலையில், தற்போது இந்திய அணியையும் வீழ்த்தியுள்ளது. இதன் மூலமாக குரூப் பிரிவில் கத்தார் அணி முதலிடத்திற்கு முன்னேறியுள்ளது.
நன்றி : myKhel. All rights reserved.
No comments:
Post a Comment