Recent Posts

Search This Blog

எதிர்வரும் பொதுத் தேர்தலை இலக்காகக் கொண்டு புதிய அரசியல் கூட்டணியை உருவாக்கும் பணியில் முன்னாள் ஜனாதிபதி சந்திரிக்கா களத்தில்...

Sunday, 26 November 2023


எதிர்வரும் பொதுத் தேர்தலை இலக்காகக் கொண்டு புதிய அரசியல் கூட்டணியை உருவாக்கும் பணியில் முன்னாள் ஜனாதிபதி சந்திரிக்கா பண்டாரநாயக்க குமாரதுங்க முன்னிலை வகித்துள்ளதாக அரசியல் வட்டாரங்களில் இருந்து தெரிவிக்கப்படுகிறது.

முன்னாள் ஜனாதிபதி சந்திரிக்கா பண்டாரநாயகவும் முன்னாள் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவும் இணைந்து செயல்பட்ட கதிரை சின்னத்தைக் கொண்ட பொது பெரமுனவுக்கு புத்துயிர் பெற நடவடிக்கை எடுத்து வருவதாகத் தெரிவிக்கப்படுகிறது.

இதற்காக பல சுற்றுப் பேச்சுவார்த்தைகள் நடத்தப்பட்டதாகவும் கூறப்படுகிறது.

ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியின் தவிசாளராக திருமதி சந்திரிகா பண்டாரநாயக்காவை நியமித்து, கட்சியின் தலைமை பொறுப்பை மைத்திரிபால சிறிசேன விடம் ஒபபடைககலாம் எனத் தெரிவிககபபட்டு ள்ளது.


எவவாறாயினும், இந்த உத்தேச கூடடணியின் தலைமைத்துவத்தைத் சந்திரிகாவிடம் வழங்குவதற்கு ஸ்ரீலங்கா கட்சியின் ஒரு பிரிவினர் எதிர்ப்பு தெரிவித்ததால், அது தொடர்பிலான அறிவிப்பை வெளியாவது தாமதமாகியுள்ளதாகக் கூறப்படுகிறது.


மைத்திரிபால ஒரு காலத்தில் அரசியலில் திரைக்குப் பின்னால் இருந்த ஒரு நபராகக் காணப்பட்ட முன்னாள் ஜனாதிபதி, பலம் வாய்ந்த மஹிந்த, ராஜபக்‌ஷ அரசாங்கத்தைத் தோற்கடித்து நல்லாட்சி அரசாங்கத்தை உருவாக்கியதில் பெரும் அர்ப்பணிப்புடன் செயல்பட்டவர்.


இதற்கிடையில், மேலும் பல கட்சிகள் மேலும் மூன்று அரசியல் கூட்டணிகளை உருவாக்க முயற்சித்து வருவதாகக்
கூறப்படுகிறது மகிந்த ராஜபக்‌ஷ மற்றும் பசில் ராஜபக்‌ஷ தலைமையில் ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவின் தலைமையில் புதிய அரசியல் கூட்டணி ஒன்று ஸ்தாபிக்கப்பட உள்ளதாகவும் தகவல்கள் வெளியாகியுள்ள.


No comments:

Post a Comment