Recent Posts

Search This Blog

சுற்றுலாப் பயணிகளை ஏற்றிச் சென்ற பஸ், ரயில் கடவையை கடக்க முற்பட்ட போது ரயிலுடன் மோதி விபத்து.

Tuesday, 28 November 2023


கட்டுநாயக்க விமான நிலையத்திற்கு சுற்றுலாப் பயணிகளை ஏற்றிச் சென்ற பஸ் ஒன்று வஸ்கடுவ பகுதியில் இன்று (29) காலை பாதுகாப்பற்ற ரயில் கடவையை கடக்க முற்பட்ட போது ரயிலுடன் மோதி விபத்துக்குள்ளாகியது.


இவ்விபத்தில் சுற்றுலா பயணிகள் இருவர் சிறு காயங்களுக்கு உள்ளாகியுள்ளதாக களுத்துறை வடக்கு பொலிஸார் தெரிவித்தனர்.


அளுத்கமவில் இருந்து ஹலவத்தை நோக்கி பயணித்த ரயிலுடனேயே குறித்த பஸ் மோதி விபத்து நேர்ந்துள்ளது.


செக் குடியரசிற்குச் செல்லவிருந்த சுற்றுலாப் பயணிகளை ஒரு ஹோட்டலில் இருந்து ஏற்றிக்கொண்டு, மற்றுமொரு ஹோட்டலில் இருந்த சுற்றுலாப் பயணிகளையும் ஏற்றிச் சென்ற போது இந்த விபத்து ஏற்பட்டுள்ளது.


கட்டுநாயக்க சர்வதேச விமான நிலையத்தில் இருந்து இரவு 9 மணி அளவில் புறப்படவிருந்த விமானத்தில் பயணிக்க இருந்த சுற்றுலாப் பயணிகளே இவ்வாறு விபத்துக்குள்ளாகி யுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.


இந்த விபத்தில் பஸ்ஸின் பின்பகுதி பலத்த சேதமடைந்ததுடன், ரயிலும் சேதமடைந்ததுள்ளது.


மேலும் புகையிரத சாரதிக்கு கண்ணில் சிறு காயங்களுக்குள்ளான நிலையில் களுத்துறை போதனா வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.


No comments:

Post a Comment