Recent Posts

Search This Blog

யாழில் யுவதி ஒருவரை கடத்திச் சென்று கூட்டு பாலியல் வன்புணர்வு செய்து கொன்ற சம்பவத்தில் குற்றவாளிகளாக அறிவிக்கப்பட்ட மூன்று இராணுவ சிப்பாய்களில் இருவர் குற்றமற்றவர்கள் என விடுவிப்பு.

Tuesday, 28 November 2023


யாழ்ப்பாணத்தில் யுவதி ஒருவரை கடத்திச் சென்று கூட்டு பாலியல் வன்புணர்வுக்கு உட்படுத்தி அவரை கொலை செய்த சம்பவத்தில் குற்றவாளிகளாக அறிவிக்கப்பட்டு, மேல் நீதிமன்றினால் மரண தண்டனை விதிக்கப்பட்ட மூன்று இராணுவ சிப்பாய்களில் இருவர் மேன்முறையீட்டு நீதிமன்றினால் குற்றமற்றவர்கள் என கருதி விடுவிக்கப்பட்டுள்ளனர்.

மற்றுமொரு சந்தேகநபருக்கு எதிராக மீண்டும் வழக்கு விசாரணைகளை முன்னெடுத்து செல்லுமாறும் மேன்முறையீட்டு நீதிமன்றம் கொழும்பு மேல் நீதிமன்றுக்கு உத்தரவிட்டுள்ளது.

யாழ்ப்பாணம் - பலாலி வீதியின் கோண்டாவில் பகுதியில் உள்ள இராணுவ முகாமிற்கு அருகில் மோட்டார் சைக்கிலில் பயணித்த யுவதி ஒருவர் கடத்தப்பட்டு, கூட்டு பாலியல் வன்புணர்வு உட்படுத்தப்பட்ட நிலையில் கொலை செய்யப்பட்டதாக, குறித்த இராணுவ சிப்பாய்களுக்கு எதிராக குற்றஞ்சாட்டப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.


No comments:

Post a Comment