இந்தியாவின் மத்திய பிரதேஷ் மாநிலத்திலுள்ள நர்மதாபுரம் பகுதியில் சுய நினைவிழந்திருந்த பாம்பு ஒன்றிற்கு வாயோடு வாய் வைத்து பொலிஸ் அதிகாரி ஒருவர் முதலுதவி சிகிச்சை கொடுத்து பாம்பின் உயிரை காப்பாற்றியுள்ளார்.
இந்த சம்பவம் குறித்த வீடியோ தற்போது இணையத்தில் வெளியாகி மிகவும் பரபரப்பாக பகிரப்பட்டு வருகின்றது.
பாம்பு விவசாய நிலத்தில் வைக்கப்பட்டிருந்த பூச்சிக்கொல்லி மருந்தின் மீது விழ்ந்து மயங்கி இருந்த நிலையில், அங்கு பாதுகாப்பு பணியில் ஈடுப்பட்டிருந்த குறித்த பொலிஸ் அதிகாரியால் வாயோடு வாய் வைத்து ஊதி பாம்புக்கு மீண்டும் உயிர் கொடுத்துள்ளதாக இந்திய ஊடகங்கள் தகவல் தெரிவிக்கின்றன.
பாம்பிற்கு பொலிஸ் அதிகாரி செய்த முதலுதவியை அனைவரும் முயற்சித்து பார்க்க வேண்டாம் என்று வேண்டுகோள் விடுக்கப்பட்டுள்ளது.
No comments:
Post a Comment