Recent Posts

Search This Blog

அமெரிக்காவில் துப்பாக்கி சூடு நடத்தி 22 பேரை கொன்ற நபர் 'ரொபார்ட் கார்ட் ' என அடையாளம் காணப்பட்டுள்ளார்.

Wednesday, 25 October 2023
அமெரிக்கா - லூயிஸ்டனில் நடந்த துப்பாக்கிச் சூட்டில் குறைந்தது 22 பேர் கொல்லப்பட்டனர் மற்றும் 50 இற்கும் அதிகமானவர்கள் காயமடந்தனர்.

லூயிஸ்டனில் புதன்கிழமை இரவு இடம்பெற்ற துப்பாக்கிச் சூடுகளைத் தொடர்ந்து குறைந்தது 22 பேர் இறந்துள்ளனர். மற்றும் டஜன் கணக்கானவர்கள் காயமடைந்துள்ளனர் என்று அதிகாரிகள் கூறுகின்றனர்.

துப்பாக்கிச்சூட்டில் ஈடுபட்ட சந்தேக நபரை தேடும் பணி தீவிரமாக நடைபெற்று வருவதாக அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

லூயிஸ்டன் காவல் துறையினரால் அடையாளம் காணப்பட்டுள்ள துப்பாக்கிதாரி 'ராபர்ட் கார்ட் ' என பெயர் உடையவர்.

இவர் துப்பாக்கிச் சூட்டில் ஆர்வமுள்ள நபராக இருந்ததாக காவல்துறை அடையாளம் கண்டுள்ளது.

40 வயதுடைய இவர் தொடர்பில் மக்கள் ஆபத்தானதாக கருத வேண்டும்- வெளியில் தற்போதைக்கு நடமாட வேண்டாம் " என்று காவல் துறை பேஸ்புக் பதிவில் பொதுமக்களை எச்சரித்துள்ளது .


மேலும், "அவர் எங்கிருக்கிறார் என்பது உங்களுக்குத் தெரிந்தால், சட்ட அமலாக்கத் துறையைத் தொடர்பு கொள்ளவும் எனவும் காவல்துறை வேண்டிக் கொள்கிறது.

Robert card ஒரு சான்றளிக்கப்பட்ட துப்பாக்கி பயிற்றுவிப்பாளர் மற்றும் அமெரிக்க இராணுவ ரிசர்வ் உறுப்பினர் என்றும் அதிகாரிகள் கூறுகிறார்கள்.

மேலும் இவருக்கு சமீபத்தில் ஒரு மனநல facility உறுதியளிக்கப்பட்டது என மேலும் தெரிவிக்கபடுகிறது.

நாங்கள் துப்பாக்கி தாரியை பிடிக்க நடவடிக்கை எடுக்கிறோம் அதுவரை அனைத்து வணிகங்களையும் மூடவும் நாங்கள் வேண்டுகோள் விடுகிறோம்" என்று ஆண்ட்ரோஸ்கோகின் கவுண்டி ஷெரிப் அலுவலகம் பேஸ்புக்கில் தெரிவித்துள்ளது .

"சந்தேகத்திற்குரிய நபரின்" படங்களை காவல்துறை வெளியிட்டதுடன் . அந்த நபர் அதிக சக்தி வாய்ந்த தாக்குதல் பாணி துப்பாக்கியை வைத்திருப்பதைக் காண முடிந்தது.

தயவுசெய்து உங்கள் வீட்டிற்குள் சென்று கதவுகள் பூட்டப்பட்ட நிலையில் இருங்கள்" என்று மாநில காவல்துறை பேஸ்புக்கில் ஒரு பதிவில் கூறியுள்ளது. "சந்தேகத்திற்குரிய செயலையோ அல்லது நபர்களையோ நீங்கள் கண்டால் 911ஐ அழைக்கவும் என மேலும் தெரிவித்துள்ளது.


No comments:

Post a Comment