ஆடை விடயம் போன்று தான் சிலவை.உள்ளத்தில் ஈமான் இருக்கிறது.அதனை வெளியே காட்ட வேண்டியதில்லை என இஸ்லாத்தின் கருத்தை தலைகீழாக விளங்கிய பல அடிமட்ட முட்டாள்கள் ஒழுங்கான முறையில் ஆடை அணிவதில்லை.பலஸ்தீன் விடயத்திலும் சிலரது உள நிலை அப்படித்தான்.ஊரில் ஏதாவது ஏற்பட்டால் பொங்கும் இவர்களது உள்ளம் பலஸ்தீன் பிரச்சினையின் போது மட்டும் முகஸ்துதி இல்லாமல் இருப்பதற்காக அதைப்பற்றி பேசாமலும் கதைக்காமலும்,எழுதாமலும் ஈமானைப் பொத்தி வைத்துக்கொண்டு இருக்கின்றனர்.அதாவது சஜூதிலே துஆ கேட்பதுடன் நிறுத்தினால் போதும் என்ற உச்ச கட்ட சூபித்துவம் என்றாலும் பிழையல்ல.
பலஸ்தீன் தொடர்பான அறிக்கைகள்,செய்திகள்,,கானொளிகள்,உரைகள் இவற்றைப் பதிவிடுவதால் என்ன இஸ்ரேல் பலஸ்தீனிடம் சமாதானப் பேச்சுவார்த்தை செய்துவிடப் போகிறதா என்ன?என்று நச்சரிக்கும் இந்தப் பரரவலான மனநிலை இன்றைய தலைமுறையிடம் இருப்பது ஆபத்தான விடயம்.
அப்படி எனில் துஆ ஒன்றை மட்டும் கேட்டுவிட்டு பலஸ்தீன் மக்கள் அந்த மண்ணை விட்டும் வெளியேறி இருக்கலாமல்லவா?
ஆரம்ப காலம் மற்றும்
நபியவர்களது காலம் என முஸ்லிம்களுக்கு இவ்வாறானதொரு பிரச்சினை இருந்து வந்தது பற்றி இன்னொருவரிடம் இந்தப் பிரச்சினை கூறப்படாமல் இருந்திருந்தால், அந்த செய்தியை அறிந்தவர் அதனை எழுதி வைக்காது இருந்திருந்தால் மறக்கடிக்கப்பட்ட எம் தலைமுறை பலஸ்தீன் எமது முதல் கிப்லா என்பதும் அது பலஸ்தீனியர்களது பூர்விக பூமி என்பதையும் ஒவ்வொருவரும் பிறக்கும் போது அசரீரி வந்து ஒலித்திருக்குமா என்ன?
அது அனைத்தும் கடந்து எழுதாமலே வாய் வழியாக நாம் அறிந்திருந்தால் உலகின் ஏனைய சமூகங்கள் அதிலும் ஆதாரமின்றி எமது வெறும் வாய் வார்த்தைகளை இந்த 21ம் நூற்றாண்டில் உள்ள மக்கள் நம்பியே இருப்பார்கள் அல்லவா? அவை தொடராக ஆவணமாகவும், உலகிற்கு எடுத்துரைக்கப்படுவதாலுமே எமது உண்மைகள் வலுவாகின்றன.
சமாதான உடன்படிக்கை தான் செய்யும் வழி எம்மிடம் இல்லை எனினும் அவர்கள் அனுபவிக்கும் அல்லல்களையாவது உலகறியச் செய்வதில் ஏன் கஞ்சத்தனம்?அதன் மூலமாக இரட்டை வேட (Double Standard Medias)ஊடகங்களது முக மூடிகளைக் களைய வேண்டாமா?
சில ஊடகங்கள் பலஸ்தீனிய பொது மக்களுக்கு நடைபெறும் அநீதிகளைப் பகிரும் பதிவுகளை நீக்கி வருகிறது.
சடுதியாக,களத்தில் இல்லாத அல்லது வரலாறே அறியாதவர்கள்
நியாயம் பேசுவதிலும் நியாயம் வேண்டாமா?எந்தத் தரப்பாயினும் உயிர்களின் கண்ணியம் பேணப்படவும் மதிக்கப்படவும் வேண்டும்.அதுதான் நீதி.
இஸ்ரேல் பக்கமாக மட்டுமே தமது கெமராக்களை சில ஊடகங்கள் திருப்பிக்கொண்டும் அங்கு மட்டும்தான் குழந்தைகள்,முதியவர்கள் அழிக்கப்பட்டது போலவும் அழுதுகொண்டிருக்கின்றன.ஆனால், பலஸ்தீனைப் பொறுத்தவரை உயிர்ப்பலிகள் எண்ண முடியாதவை.அது உலகிற்குப் பழக்கப்பட்டதாலோ என்னவோ பலஸ்தீன மக்களின் அழுகை யாருக்கும் கேட்பதில்லை.
நாமும் உண்மை கள நிலவரத்தை உலகிற்கு சொல்லாமல்,இரட்டை வேட ஊடகங்களும் சொல்லாமல் இருந்தால் எமது சகோதரர்களின் நிலையை உலகிற்கு சொல்வது யார்?
முஸ்லிம்களின் பக்கமோ பிற இன மக்களின் பக்கமோ,
ஒரு முஸ்லிமாக சரியை சரியாகவும் பிழையை பிழை எனவும் கூறும் திராணி எம்மிடம் இருக்க வேண்டும்.
எமது துஆக்களில் எமது பலஸ்தீன சகோதரர்களையும் இணைத்துக்கொள்வதுடன் அவர்களது துயரங்களைக் கண்டும் காணாமலும்,கேட்டும் கேட்காமலும் கடந்துவிடாமல் உண்மைகளை உலகறியச் செய்வோம்.
சார்ந்துதான் நிற்க முடியாவிட்டாலும் உண்மையின் பக்கமாவது நிற்றலே தர்மமாகும்!
குறிப்பு:எமது கருத்துக்கள் உண்மையாக மட்டுமே இருக்கும்பட்சத்திலேயே அதனைப் பகிர்தல் வேண்டும்.மற்ற இன சகோதரர்களது மனதைப் புண்படுத்தும் வகையிலோ,வன்முறைகளைத் தூண்டும் வகையிலோ எமது கருத்துக்களை வெளியிடுவதை எப்போதும் தவிர்த்துக்கொள்தல் வேண்டும்.வன்முறையை அழிக்கும் எமது நோக்கம் இன்னோர் வன்முறையை உருவாக்காத வகையில் செயற்படுவது எமது கடமையாகும்.!
#BinthFauzar(SEUSL)
No comments:
Post a Comment