Recent Posts

Search This Blog

வீதியில் நிறுத்தி வைக்கப்பட்டிருந்த பஸ்ஸுடன் மற்றுமொரு பஸ் மோதியதில் 15 பேர் காயம் 📍 கொழும்பு - கண்டி பிரதான வீதி வேவல்தெனிய

Monday, 25 September 2023


வெலிமடையில் இருந்து கொழும்பு நோக்கி பயணித்த பஸ் ஒன்று இன்று (25) காலை நிறுத்தி வைக்கப்பட்டிருந்த பஸ்ஸுடன் மோதியதில் இந்த விபத்துக்குள்ளானதில் 15 பேர் காயமடைந்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.



கொழும்பு - கண்டி பிரதான வீதி வேவல்தெனிய பகுதியில் இடம்பெற்ற குறித்த விபத்தில் 15 பேர் படுகாயமடைந்து வரக்காபொல மற்றும் வதுப்பிட்டிவல வைத்தியசாலைகளில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவிக்கின்றனர்.



இவ்வாறு காயமடைந்தவர்கள் கொழும்பு நோக்கிச் சென்று கொண்டிருந்த பஸ்ஸில் பயணித்தவர்கள் என தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும், இந்த விபத்தால் அந்த குறித்த வீதியில் அதிகாலை ஐந்து மணி வரை போக்குவரத்து பாதிக்கப்பட்டமை குறிப்பிடத்தக்கது.




No comments:

Post a Comment