இந்தியாவில் வரும் ஒக்டோபர், நவம்பர் மாதங்களில் 50 ஓவர் உலக கிண்ண தொடர் இடம்பெறவுள்ளது.
இந்த தொடரில் இந்தியா, பாகிஸ்தான், இங்கிலாந்து, நியூசிலாந்து உள்ளிட்ட 10 அணிகள் கலந்து கொள்கின்றன.
உலகக் கிண்ண தொடர் ஆரம்பமாக இன்னும் சுமார் 1 மாத காலமே உள்ள நிலையில் பல முன்னாள் கிரிக்கெட் வீரர்கள் சம்பியன் பட்டம் வெல்லும் அணி, அரையிறுதிக்கு முன்னேறும் அணிகள் எவை என்பவை குறித்து தங்களது கருத்துகளை வெளியிட்டு வருகின்றனர்.
இந்நிலையில் இந்திய அணியை அதன் சொந்த மண்ணில் வீழ்த்தி உலகக் கிண்ணத்தை கைப்பற்றுவது என்பது கடினமான காரியம் என பாப் டு பிளெஸ்சிஸ் தெரிவித்துள்ளார்.
இது தொடர்பாக அவர் மேலும் தெரிவிக்கையில்,
தென்ஆப்பிரிக்கா தற்போது நல்ல அணியாக இருந்தாலும் இந்திய அணியை தாண்டி அவர்களது சொந்த இடத்தில் கிண்ணத்தை வெல்வது என்பது மிகவும் கடினம். அதேபோன்று ஐசிசி கிண்ணங்களை அதிகமாக வென்றுள்ள அவுஸ்திரேலிய அணியை தாண்டுவதும் தென்னாப்பிரிக்க அணிக்கு கடினம்.
எனவே, என்னை பொறுத்தவரை இந்தியா மற்றும் அவுஸ்திரேலியா அணிகளுக்கு தான் இந்த முறை கிண்ணத்தை வெல்ல அதிக வாய்ப்பு உள்ளது.
அதிலும் குறிப்பாக இந்திய அணி தங்களது சொந்த மைதானத்தில் விளையாடுவதால் இந்திய அணியை வீழ்த்துவது என்பது எந்த ஒரு அணிக்குமே சவாலாக இருக்கும்.
எனவே என்னை பொறுத்தவரை இந்த உலகக் கிண்ண வெல்லும் அணிகளில் இந்திய அணி தான் முதன்மை தேர்வாக இருக்கிறது.
வெள்ளைப்பந்து கிரிக்கெட்டில் இந்திய அணி இப்போது மிகச் சிறப்பான ஆதிக்கத்தை செலுத்தி வருவதாலும் துணைக்கண்டத்தில் எந்த ஒரு அணியும் அவர்களை எதிர்த்து விளையாடுவது கடினம் என்பதாலும் இந்திய அணியே இந்த 50 ஓவர் உலகக் கிண்ணத்தை வெல்ல அதிக வாய்ப்புள்ளது என தெரிவித்துள்ளார்.
No comments:
Post a Comment