Recent Posts

Search This Blog

இலங்கையிலிருந்து கடத்தி செல்லப்பட்ட 9 கிலோ தங்கம் பறிமுதல் செய்யப்பட்டு, தம்பதியினர் கைது

Sunday, 27 August 2023


திருச்சி அருகே அரச பஸ்சில் கடத்தி வரப்பட்ட ரூ.5 கோடியே 89 இலட்சத்து 9 கிலோ தங்கம் பறிமுதல் செய்யப்பட்டது. இது தொடர்பாக தம்பதி உட்பட 3 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர்.



இராமநாதபுரம் மாவட்டம், இராமேசுவரத்தில் இருந்து இலங்கைக்கு கடல் வழியாக தங்கம், கஞ்சா, கடல் அட்டைகள், பீடி இலைகள் உட்பட பல்வேறு பொருட்களை கடத்தி செல்லும் சம்பவங்கள் அடிக்கடி இடம்பெற்று வருகின்றன.



இதையடுத்து கடத்தல்களை தடுக்க கடலோர பாதுகாப்பு படை பொலிஸார் 24 மணி நேரமும் கண்காணிப்பு பணியில் ஈடுபட்டு வருகின்றனர்.



இலங்கையிலிருந்து கடந்த ஒகஸ்ட் 23 ஆம் திகதி இராமநாதபுரம் மாவட்டம் தொண்டி கடற்கரை பகுதி வழியாகக் கடத்தி வரப்பட்ட தங்கத்தை தம்பதி, பேருந்தில் சென்னைக்குக் கொண்டு செல்வதாக மத்திய வருவாய் நுண்ணறிவுப்பிரிவு அதிகாரிகளுக்கு தகவல் கிடைத்தது.



இதனையடுத்து, இந்த நிலையில் மத்திய வருவாய் புலனாய்வு பிரிவு அதிகாரிகளுக்கு இலங்கையில் இருந்து படகு மூலமாக இராமநாதபுரம் மாவட்டம் தொண்டிக்கு தங்கம் கடத்தி வரப்பட்டு பின்னர் அரச பஸ்சில் சென்னைக்கு தம்பதி உட்பட 3 பேர் கொண்டு செல்வதாக தகவல் கிடைத்தது.

இந்த நிலையில் தம்பதி உட்பட 3 பேர் பயணம் செய்த பஸ் திருச்சி அருகே கல்பாளையம் கிராமத்தில் வந்து கொண்டிருந்தது.


இதனையடுத்து மத்திய வருவாய் நுண்ணறிவு பிரிவு அதிகாரிகள் அந்த பஸ்சை வழிமறித்து திடீர் சோதனை நடத்தியுள்ளனர்.


பஸ்சில் சந்தேகப்படும் வகையில் இருந்த தம்பதி உட்பட 3 பேரை பிடித்து விசாரணை நடத்தியதில் முன்னுக்குப்பின் முரணாக பதில் வழங்கினர்.


அவர்கள் கொண்டுவந்த பையை சோதனை நடத்தியதில் 9 கிலோ 765 கிராம் தங்க கட்டிகள் இருந்தது.


மேலும் 6 இலட்சம் பணமும் மற்றும் மூன்று கார்கள் பறிமுதல் செய்யப்பட்டது.இதையடுத்து அதிகாரிகள் அவைகளை பறிமுதல் செய்தனர்.


பறிமுதல் செய்யப்பட்ட தங்கத்தின் இந்திய ரூபாயின் மதிப்பு ரூ. 5 கோடியே 89 இலட்சத்து 66 ஆயிரம் ஆகும். மேலும் தம்பதி உட்பட 3 பேரையும் அதிகாரிகள் கைது செய்தனர்.


கடந்த 3 நாள்களாக விசாரணை செய்து வந்த நிலையில், கடத்தல் சம்பவத்தில் திருச்சியைச் சேர்ந்த சிலருக்கு தொடர்பு இருப்பது தெரியவந்துள்ளது. தொடர்ந்து இது குறித்து பொலிஸார் விசாரணை மேற்கொண்டு வருகின்நனர்





No comments:

Post a Comment