Recent Posts

Search This Blog

இனவாத சுனாமி அடித்தாலும், சூறாவளி சுழன்றடித்தாலும் தமிழர்களை ஒழிக்க முடியாது ; மனோ கணேசன்

Sunday, 27 August 2023


இலங்கையில் வட மாகாணத்திலும், கிழக்கு மாகாணத்திலும், மலையகத்திலும், நாடு முழுக்கவும் யுத்தம் இல்லை. ஆனால் இனவாதம் இருக்கிறது என கனடா டொரென்டோவில் நிகழ்ந்த தமிழர் தெருத் திருவிழாவில் உரையாற்றிய தமிழ் முற்போக்கு கூட்டணி தலைவர் மனோ கணேசன் கூறினார்.

தற்சமயம் கனடா சென்றுள்ள மனோ கணேசன் மேலும் கூறியதாவது:

இனவாத சூறாவளி சுழன்றடித்தாலும், சுற்றி சுற்றி அடித்தாலும், சுனாமியாக அடித்தாலும் சரி, தமிழர்களை ஒழிக்கவோ, அழிக்கவோ முடியாது.

இனவாதத்தை அழித்து, வீழ்த்தி நியாயமான தீர்வை பெறுவோம் என்ற நம்பிக்கை இருக்கிறது.

தமிழக தாயகம், இலங்கை தாயகம் ஆகியவற்றுக்கு வெளியே இங்கே கனடாவில் வாழ்கின்ற தமிழர்கள்தான் அதிக துடிப்புடன் இருக்கீறீர்கள். இந்நோக்குக்காக நீங்கள் அதிக பங்களிக்க வேண்டும்.


No comments:

Post a Comment