Recent Posts

Search This Blog

மட்டக்களப்பில் டிப்பர் ரக வாகனம் விபத்துக்குள்ளானதில் படுகாயமடைந்த மூவர் வைத்தியசாலையில் அனுமதி.

Sunday, 30 July 2023


(அஸ்ஹர் இப்றாஹிம்)

மட்டக்களப்பு - கல்முனை நெடுஞ்சாலையில் தொழில்நுட்பக் கல்லூரிக்கு எதிரிலுள்ள மின்கம்பத்தில் டிப்பர் ரக வாகனமொன்று இன்று (30) மாலை மோதுண்டதில் வாகனம் சேதத்திற்குள்ளாகி உள்ளதுடன் காயமடைந்த மூவர் மட்டக்களப்பு போதனா வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். 


இதன்போது   டிப்பரின் பின்னால் பயணித்த மோட்டார் சைக்கிள்,  டிப்பரில் மோதுண்டதில் அதில் பயணித்த இருவரும்  பலத்த காயங்களுக்குள்ளான நிலையில் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். 


இவ்விபத்து சம்பந்தமாக காத்தான்குடி பொலிஸார் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகி்ன்றனர்.



No comments:

Post a Comment