Recent Posts

Search This Blog

நடடன பல பகஙகளலம மழயடனன வனல எதரபரபப.

Monday, 26 June 2023



 சப்ரகமுவ மற்றும் மேல் மாகாணங்களிலும்  அத்துடன் காலி, மாத்தறை ,கண்டி மற்றும் நுவரேலியா  

மாவட்டங்களிலும் அடிக்கடி மழை அல்லது இடியுடன் கூடிய மழை  பெய்யக்கூடும்.


மேல் மாகாணத்தின் சில இடங்களிலும் அத்துடன் காலி மற்றும் மாத்தறை மாவட்டங்களின் சில இடங்களிலும் 75 mm இலும் கூடிய ஓரளவு பலத்த மழை பெய்யலாம் என எதிர்பார்க்கப்படுகிறது.

வடமேல் மாகாணத்தில் இடைக்கிடையே மழை பெய்யக்கூடும்.

ஊவா  மாகாணத்தின் சில இடங்களிலும் அத்துடன் அம்பாறை மற்றும் மட்டக்களப்பு மாவட்ட ங்களின் சில இடங்களிலும்  மாலை அல்லது இரவு வேளைகளில் மழை அல்லது இடியுடன் கூடிய மழை பெய்யக்கூடிய வாய்ப்புக் காணப்படுகின்றது. 


மத்திய மலை நாட்டின் மேற்கு சரிவுகளிலும்,வடமத்திய மாகாணத்திலும் அத்துடன் புத்தளம்,  ஹம்பாந்தோட்டை மற்றும் திருகோணமலை மாவட்டங்களிலும் மணித்தியாலத்திற்கு 40 ‐ 45 km  வேகத்தில் அடிக்கடி  பலத்த காற்று வீசக்கூடும் என எதிர்பார்க்கப்படுகிறது. 


பலத்த காற்றும் மின்னல் தாக்கங்களும் ஏற்படக்கூடிய சந்தர்ப்பங்களில் பொதுமக்கள் அவதானத்துடன் செயற்படுமாறு கேட்டுக்கொள்ளப்படுகின்றனர்.  


கடல் பிராந்தியங்களில் 

****************************

   

புத்தளம் தொடக்கம்  கொழும்பு, காலி ஊடாக மாத்தறை வரையான கடல் பிராந்தியங்களின் பல இடங்களில் மழை அல்லது இடியுடன் கூடிய மழை பெய்யக்கூடும். 


கடல் பிராந்தியங்களில் மணித்தியாலத்திற்கு 25 - 40 km வேகத்தில் தென் மேற்குத் திசையில் இருந்து காற்று வீசும். 


காங்கேசன்துறை தொடக்கம் மன்னார் ஊடாக புத்தளம் வரையான அத்துடன்   ஹம்பாந்தோட்டை தொடக்கம்  பொத்துவில் வரையான கடல் பிராந்தியங்களில் மணித்தியாலத்திற்கு  50 ‐ 60 km இலும் கூடிய வேகத்தில் அடிக்கடி காற்று அதிகரித்து வீசக்கூடும். இவ்வாறான சந்தர்ப்பங்களில் இக் கடல் பிராந்தியங்கள்  கொந்தளிப்பாகக்  காணப்படும். 


திருகோணமலை  தொடக்கம் காங்கேசன்துறை வரையான அத்துடன் புத்தளம் தொடக்கம்  கொழும்பு,  காலி ஊடாக ஹம்பாந்தோட்டை வரையான  கடல் பிராந்தியங்களில் மணித்தியாலத்திற்கு 50 km இலும் கூடிய வேகத்தில் இடைக்கிடையே  காற்று அதிகரித்து வீசக்கூடும். இவ்வாறான சந்தர்ப்பங்களில் இக் கடல் பிராந்தியங்கள் ஓரளவு  கொந்தளிப்பாக் காணப்படும். 


ஆனால் இடியுடன் கூடிய மழை பெய்யக்கின்ற சந்தர்ப்பங்களில் பலத்த காற்று வீசுவதுடன் அவ்வேளைகளில் கடல் பிராந்தியங்கள் தற்காலிகமாக மிகவும் கொந்தளிப்பான நிலையில் காணப்படும்.


மொஹமட் சாலிஹீன்,

சிரேஸ்ட வானிலை அதிகாரி.




No comments:

Post a Comment