Recent Posts

Search This Blog

ஏமபப இபபட பணணறஙக? யழபபணததறக வஜயம சயத மததரகக கலவதயன களரபனம வழஙகபபடடத அமபலம.

Friday, 30 June 2023


முன்னாள் ஐனாதிபதி மைத்ரிபால சிறிசேன யாழ்ப்பாணத்திற்கு விஜயம் செய்துள்ள நிலையில், யாழ். உடுப்பிட்டி - மகளீர் கல்லூரியில் இடம் பெற்ற நிகழ்வில் கலந்துகொண்டிருந்த நிகழ்வுக்காக கொள்வனவு செய்யப்பட்ட குளிர்பானம் காலாவதியானமை பாதுகாப்பு அதிகாரிகளால் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.


உடுப்பிட்டி - மகளிர் கல்லூரியில் விளையாட்டு மைதானம் ஒன்றுக்கான நிதி உதவி வழங்கும் பொருட்டு முன்னாள் ஐனாதிபதி மைத்ரிபால சிறிசேன குறித்த நிகழ்வில் கலந்து கொண்டிருந்தார்.


இதனிடையே, நிகழ்வில் கலந்து கொண்டவர்களுக்காக ஏற்பாடு செய்யப்பட்ட சிற்றுண்டி உபசாரத்திற்காக உடுப்பிட்டியில் உள்ள வர்த்தக நிலையம் ஒன்றில் 4 குளிர்பான போத்தல்கள் கொள்வனவு செய்யப்பட்டன.


அதனை பாதுகாப்பு பிரிவினர் பரிசோதித்த போது காலாவதியானமை கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.


இந்த சம்பவத்திற்கு சுகாதார பிரிவு உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என வலியுறுத்தப்பட்டுள்ளது.


No comments:

Post a Comment