ஒரு கிலோகிராம் பச்சை மிளகாயின் சில்லறை விலை ஆயிரம் ரூபாயாக அதிகரித்துள்ளது.
ஒரு கிலோகிராம் பச்சை மிளகாயின் மொத்த விலை 800 முதல் 900 ரூபாய் வரை அதிகரித்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.
முன்னதாக, ஒரு கிலோகிராம் பச்சை மிளகாய் 350 முதல் 500 ரூபாய் வரையில் விற்பனை செய்யப்பட்டது.
சந்தைக்கு வரும் பச்சை மிளகாயின் அளவு குறைந்துள்ளமையால் விலை உயர்ந்துள்ளதாக வியாபாரிகள் கூறியுள்ளனர்.
இதேவேளை,
சதொச தனது 3 வகையான அரிசிகளின் விலைகளை குறைக்க தீர்மானித்துள்ளது.
வெள்ளை பச்சை அரிசியின் விலை 10 ரூபாவினால் குறைக்கப்பட்டுள்ளதுடன் அதன் புதிய விலை 165 ரூபாவாகும்.
இதேவேளை, நாட்டரிசி கிலோ ஒன்றின் விலை 7 ரூபாவினால் குறைக்கப்பட்டுள்ளதுடன் அதன் புதிய விலை 168 ரூபாவாகும்.
அத்துடன் ஒரு கிலோ சிவப்பு அரிசியின் விலை 2 ரூபாவினால் குறைக்கப்பட்டுள்ளதுடன் புதிய விலை 137 ரூபாவாகும்
No comments:
Post a Comment