(அஷ்ரப் ஏ சமத்)
நேற்று பதுளையில் பாராளுமன்ற உறுப்பிணர்
இராதகிருஷ்னன் ஊடகங்களில் கருத்துத் தெரிவிக்கையில் பதுளைமாவட்டத்தினது மக்கள் பிரதிநிதி கிழக்கு மாகாணத்திற்கு ஆளுநராக தெரிபு செய்யப்பட்டுள்ளதால் அப்பிரதேச வெற்றிடத்தினை அவர் கட்சி சேவை செய்வதாக தெரிவித்திருந்தார்.
நாங்கள் நாட்டை விட்டு வெளிநாடு செல்லவில்லை பதுளை மாவட்டத்தின் அடுத்த மாவட்டமான கிழக்கில் தான் இருக்கின்றோம்.
எமக்கு அம்மக்களது பிரச்சினைகளுக்கு தொலைபேசியில் கூட மக்களது பிரச்சினைகளை தீர்த்து வைக்கமுடியும்.
அல்லது எங்களது கட்சி பிரநிதிகள் ஊடக எனக்கு வாக்களித்த மக்களுக்கு எனது சேவையை பெற்றுக் கொடுத்து வருகின்றேன்.
இலங்கை தொழிலாளர் காங்கிரஸின் தலைவரும் கிழக்கு மாகாண ஆளுநருமான செந்தில் தொண்டமான்
இன்று 28. ஆம் திகதி அவரது கட்சித் தலைமையகத்தில் நடத்திய ஊடக மாநாட்டின்போது மேற்கண்டவாறு தெரிவித்தார்.
தொடா்ந்து கருத்து தெரிவித்த செந்தில் தொண்டமான்....
நாங்கள் இந்த நாட்டை விட்டு அவுஸ்திரேலியா கனடா செல்லவில்லை.
கிழக்கு மாகாணத்தில் தான் இருக்கிறோம்.
கிழக்குக்கு அடுத்த மாவட்டம் பதுளை ஆகும். அங்குள்ள மக்கள் பிரச்சனைகளுக்கு எனக்கு கிழக்கிலிருந்து ஒரு தொலைபேசி அழைப்பில் அல்லது எங்களது கட்சி பிரதிநிதிகள் ஊடே எங்களுக்கு வாக்களித்த மக்களுக்கு உதவ முடியும். .....
ஊடகவிலாலர் அவர்களது கட்சி பிரதிநிதிகள் வேறு கட்சிக்குச் மாறினால் அது அவர்களது பிரச்சினையாகும்.
ஆனால் எனக்கு வாக்களித்த மக்கள் பிரச்சினைகளுக்கு தொடா்ந்தும் எனது சேவையை செய்து வருகின்றோம் அதனை கிழக்கில் இருந்து கொண்டும் எனக்கு செய்ய முடியும் என செந்தில் தொண்டமான் கூறினார்.
No comments:
Post a Comment