
நீரிழிவு நோயில் இலங்கை ஆசியாவில் முதலிடத்தில் உள்ளதாக கொழும்பு பல்கலைகழக பேராசியர் வித்யா ஜோதி ப்ரசாத் கடுலந்த குறிப்பிட்டுள்ளார்.
தேசிய பத்திரிகை ஒன்றுக்கு அவர் வழங்கிய செய்வியில் இதனை குறிப்பிட்டுள்ள அவர் தவறான உணவு பழக்கம் அதிகரித்து வருவதும் உடற்பயிற்சியின்மையுமே இதற்கு பிரதான காரணம் என அவர் கூறியுள்ளார்.
இலங்கையில் சிறுவர்களிடம் உணவுப்பழக்கம் மற்றும் உடற்பயிற்சின்மை காரணமாக சிறுவர்களிடமும் நீரிழிவு நோய் ஏற்படும் அபாயம் இருப்பதாக அவர் குறிப்பிட்டுள்ளார்.
அனைவரும் சரியான உணவுப்பழக்கத்தினை கடைப்பிடிக்க வேண்டும் என கூறியுள்ள அவர் தினமும் பெரியவர்கள் ஒருமணி நேரமும் சிறுவர்கள் இரண்டு மணி நேரமும் உடற்பயிற்சியில் ஈடுபட வேண்டும் என அவர் குறிப்பிட்டார்.
No comments:
Post a Comment