Recent Posts

Search This Blog

வாருங்கள் அனைவரும் ஒன்றிணைந்து நாட்டை முன்னெடுத்துச் சென்று 2048ஆம் ஆண்டு வரை ஒரே கொள்கையில் பயணிப்போம் ; ஜனாதிபதி பாராளுமன்றில் ..

Tuesday, 25 April 2023





முழு பாராளுமன்றமும் அரசாங்கமாக மாறி எதிர்வரும் 2048ஆம் ஆண்டு வரை ஒரு கொள்கையொன்றில் பயணிப்பதற்கான வேலைத்திட்டமொன்றை ஆரம்பிப்போம் என ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க கேட்டுக்கொண்டுள்ளார்.


பாராளுமன்றில் விசேட உரையொன்றை நிகழ்த்தும் போதே அவர் இதனைத் தெரிவித்தார்.


மேலும், ஆளுங்கட்சி மற்றும் எதிர்க்கட்சி என்று பாராமல் அனைவரும் ஒன்றிணைந்து நாட்டை முன்னெடுத்துச் செல்வோம் எனவும் ஜனாதிபதி குறிப்பிட்டார்.


தற்போது பல தொழிற்சங்கங்களுக்கு வரி உள்ளிட்ட பல விடயங்களில் பிரச்சினைகள் உள்ளன. அவற்றை பேசித் தீர்த்துக்கொள்வோம். 6 மாதங்களுக்கு ஒருமுறை “தேசிய சபை” போன்றவற்றின் ஊடாக இவ்வாறான பிரச்சினைகளுக்கு தீர்வு காண முயற்சிப்போம் என்றும் தெரிவித்தார்.



No comments:

Post a Comment