Recent Posts

Search This Blog

சொந்த மகளையே பாலியல் துஸ்பிரயோகம் செய்து வந்த கொடூர தந்தை பொத்துவில் பொலிஸாரால் கைது.

Wednesday, 26 April 2023


பொத்துவில் பொலிஸ் பிரிவிலுள்ள பிரதேசத்தில் தனது 14 வயதுடைய மகளை பாலியல் துஸ்பிரயோகம் செய்து வந்த பொலிஸ் சிவில் பாதுகாப்பு உத்தியோகராக கடைமையாற்றிவரும் தந்தையை இன்று புதன்கிழமை (26) கைது செய்துள்ளதாக பொத்துவில் பொலிஸார் தெரிவித்தனர்.


குறித்த பொலிஸ் பிரிவிலுள்ள பிரதேசத்தில் 14 வயது சிறுமியை அவரது தந்தை கடந்த 3 வருடங்களாக பாலியல் துஸ்பிரயோகம் மேற்கொண்டுவந்த நிலையில், தேசிய சிறுவர் பாதுகாப்பு சபையின் அவசர பிரிவான 1929 தொலைபேசி இலக்கத்திற்கு பாதிக்கப்பட்ட சிறுமி முறைப்பாடு செய்துள்ளார்.


இதனையடுத்து பொத்துவில் பிரதேசத்தில் பொலிஸ் சிவில் பாதுகாப்பு உத்தியோகத்தராக கடமையாற்றிவரும் 38 வயதுடைய சிறுமியின் தந்தையை சம்பவதினமான இன்று காலை கைது செய்ததுடன் பாதிக்கப்பட்ட சிறுமியை வைத்தியசாலையில் அனுமதித்துள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.


இது தொடர்பான மேலதிக விசாரணைகளை பொத்துவில் பொலிஸார் மேற்கொண்டுவருகின்றனர்.



No comments:

Post a Comment