Recent Posts

Search This Blog

மாணவிக்கு ஆபாச குறுந்தகவல்கள் அனுப்பியது யார் என்பதில் குழப்பம் - பாடசாலையை சுற்றி வளைத்த மக்கள்

Wednesday, 26 April 2023


 யாழ்ப்பாணத்தில் ஆசிரியர் ஒருவரின் பெயரை பயன்படுத்தி, அவரிடம் கல்வி கற்கும் மாணவிக்கு ஆபாச குறுந்தகவல்கள் அனுப்பிய நபர் தொடர்பில் யாழ்ப்பாண பொலிஸார் விசாரணைகளை முன்னெடுத்துள்ளனர்.


சம்பவம் குறித்து தெரியவருவதாவது, 


யாழ். வலயத்திற்கு உட்பட்ட பாடசாலை ஒன்றில் கல்வி கற்பிற்கும் ஆசிரியர் ஒருவரின் பெயரை தொலைபேசியில் கூறி, தன்னை அறிமுகப்படுத்திக்கொண்டு நபர் ஒருவர், மாணவி ஒருவருடன் ஆபாசமாக கதைத்து, ஆபாச குறுந்தகவல்களும் அனுப்பியுள்ளார். 


அது தொடர்பில் மாணவி பெற்றோரிடம் கூறியதை அடுத்து , நேற்று செவ்வாய்க்கிழமை மாணவியின் பெற்றோர் மற்றும் உறவினர்கள் பாடசாலைக்கு முன்பாக கூடி, குறித்த ஆசிரியரை வெளியே வருமாறு கோரி நின்றனர். 


அதனால் ஆசிரியர் பயம் காரணமாக பாடசாலையின் பின் பக்கத்தால் தப்பி சென்றார். அதற்கிடையில் அதிபரினால், பொலிஸாருக்கு தகவல் வழங்கப்பட்டதை அடுத்து, பாடசாலைக்கு விரைந்த பொலிஸார் மாணவியின் பெற்றோர் மற்றும் உறவினர்களிடம் விசாரணைகளை முன்னெடுத்தனர். 


அதன் போது மாணவிக்கு அழைப்பு எடுத்த தொலைபேசி இலக்கத்தை பெற்று அது தொடர்பில் விசாரணைகளை முன்னெடுத்த வேளை, தொலைபேசி "சிம்" அட்டை ஆசிரியரின் பெயரில் இல்லாமல் வேறு நபரின் பெயரில் எடுக்கப்பட்டுள்ளமை தெரிய வந்துள்ளது. 


இந்நிலையில் குறித்த சிம்மை பெற்ற நபர் தொடர்பில் பொலிஸார் விசாரணைகளை முன்னெடுத்துள்ளனர். 

 



No comments:

Post a Comment