Recent Posts

Search This Blog

2 வயது குழந்தை இருப்பின் வௌிநாட்டு தொழில் இல்லை

Thursday, 27 April 2023


இரண்டு வயதுக்குட்பட்ட குழந்தைகளை கொண்ட தாய்மார்கள் வெளிநாடுகளுக்கு வேலைவாய்ப்புகளுக்காக செல்லக்கூடாதென, தொழில் மற்றும் வெளிநாட்டு வேலைவாய்ப்பு அமைச்சு புதிய சுற்றறிக்கையை வெளியிட்டுள்ளது.


அமைச்சர் மனுஷ நாணயக்கார, அமைச்சரவைக்கு சமர்ப்பித்த அமைச்சரவைப் பத்திரத்தின் பிரகாரம், வெளிநாடுகளுக்கு புலம்பெயர்ந்து செல்லும் தாய்மார்களின் குழந்தைகளை பாதுகாப்பதற்காக கடந்த வருடம் சுற்றறிக்கை வெளியிடப்பட்டது.


அதனை மேலும் செயல்திறன் மிக்கதாக மாற்றும் வகையில், மார்ச் 31ஆம் திகதி புதிய சுற்றறிக்கையை வெளியிடுவதற்கு அமைச்சு நடவடிக்கை எடுத்தது. அதற்கமைய, 45 வயதை பூர்த்தி செய்யாத வேலைவாய்ப்புக்காக வெளிநாடு செல்லும் அனைத்துப் பெண்களும் வெளிநாட்டு வேலைவாய்ப்புப் பணியகத்தில் பதிவு செய்வது தொடர்பான அறிக்கையை பூர்த்தி செய்ய வேண்டுமெனவும் அறிவிக்கப்பட்டுள்ளது.



No comments:

Post a Comment