இலங்கை பெற்றோலிய கூட்டுத்தாபனத்தின் அறிவிப்பைத் தொடர்ந்து லங்கா ஐஓசி நிறுவனமும் எரிபொருள் விலையை குறைத்துள்ளதாக அறிவித்துள்ளது.
இன்று (29) நள்ளிரவு முதல் அமுலுக்கு வரும் வகையில் இவ்வாறு விலை குறைக்கப்படவுள்ளதாக அந்நிறுவனம் அறிவித்துள்ளது.
அதற்கமைய, 92 ஒக்டேன் பெற்றோல் லீற்றரொன்றின் விலை 60 ரூபாவினால் குறைக்கப்படுவதோடு, புதிய விலை 340 ரூபா
95 ஒக்டேன் பெற்றோல் லீற்றரொன்றின் விலை 135 ரூபாவினால் குறைக்கப்படுவதோடு, புதிய விலை 375 ரூபா
அத்தோடு, ஒட்டோ டீசல் லீற்றரொன்றின் விலை 405 ரூபாவிலிருந்தது 80 ரூபா குறைக்கப்பட்டு புதிய விலை 325 ரூபா
ஒரு லீற்றர் சுப்பர் டீசலின் விலை 510 ரூபாவிலிருந்து 45 ரூபா குறைக்கப்பட்டு புதிய விலை 465 ரூபா
மண்ணெண்ணெய் விலையானது 10 ரூபாவினால் குறைக்கப்பட்டு ஒரு லீற்றர் மண்ணெண்ணெய் விலை 305 ரூபாவிலிருந்து 295 ரூபாவாக குறைக்கப்படவுள்ளமை குறிப்பிடத்தக்கது.
No comments:
Post a Comment