Recent Posts

Search This Blog

ஏறாவூர் புன்னைக்குடா வீதியை ‘எல்விஸ் வல்கம’ என பெயர் மாற்ற ஆளுநர் உத்தரவு.

Sunday, 26 March 2023


தொன்று தொட்டு
‘ஏறாவூர் புன்னைக்குடா
வீதி’ என புழக்கத்திலிருந்து
வரும் புன்னைக்குடா
வீதியின் பெயரை ‘எல்விஸ்
வல்கம’ வீதி என சிங்களப்
பெயராக மாற்றுவதற்கு
கிழக்கு மாகாண ஆளுநர்
அநுராதா யஹம்பத்
உத்தரவிட்டுள்ளமை
பிரதேசத்தில் சர்ச்சையைக்
கிளப்பியுள்ளது.
ஆளுந



ரின் உத்தரவு
வெளியானதை அடுத்து,
ஏறாவூர் நகரை ஊடறுத்துச்
செல்லும் கொழும்பு
– மட்டக்களப்பு
நெடுஞ்சாலையின் இரு
மருங்கிலும் அறிவித்தலாக
அமைக்கப்பட்டிருந்த
புன்னைக்குடா வீதி
பெயர்ப் பலகை
அகற்றப்பட்டிருக்கிறது.


இந்த அறிவித்தல்
வெளியாகி, ஏறாவூரில்
பதற்றம் ஏற்பட்டதைத்
தொடர்ந்து,
சுற்றாடல்துறை
அமைச்சர் நஸீர் அஹமட் ஊடக அறிக்கையை
வெளியிட்டிருகிறார்.
அதில், ஏறாவூர் நகர
பிரதேசம் நூறு சத வீதம்
முஸ்லிம் சமூகத்தைக்
கொண்டமைந்த போதும்
கூட, அந்த வீதிக்கு முஸ்லிம்
சமூகத்தைச் சேர்ந்த
எவரினதும் பெயரைச்
சூட்ட நடவடிக்கை
எடுக்கப்படவில்லை.
ஆனால், திடீரென காலிப்
பிரதேச சிங்கள சமூகத்தைச்
சேர்ந்த ஒன்பது பேர்
ஆளுநருக்கு ஒரு கடிதத்தை
எழுதியுள்ளனர். அதில்,
ஏறாவூர் புன்னைக்குடா
வீதிக்கு‘எல்விஸ் வல்கம’
எனப் பெயரை மாற்றுமாறு
கோரியுள்ளனர். அந்த
வேண்டுகோளை
உடனடியாக
அமல்படுத்தும்
நடவடிக்கையில் ஆளுநர்
இறங்கி, உத்தரவையும்
பிறப்பித்துள்ளார்.
காலியைச் சேர்ந்த
சிங்கள சமூகத்தவர் ஒன்பது
பேரும் விடுத்துள்ள
வேண்டுகோளில், ‘காலி,
தல்பே கிராமத்தில் பிறந்து தனது 12ஆவது
வயதில் ஏறாவூருக்குச்
சென்று அங்கே வர்த்தகம்
செய்து, நிலபுலன்களை
வாங்கியதுடன் இன்னும்
பல சேவைகளைச் செய்த
‘எல்விஸ் வல்கம’ அவர்
காலியின் பெருமைக்குரிய
புதல்வனாவார். எனவே
அவரது பெயரை ஏறாவூர்
புன்னைக்குடா வீதிக்குச்
சூட்ட உடன் நடவடிக்கை
எடுக்குமாறு, ஆளுநரைக்
கேட்டுக் கொள்கிறோம்’
என்று எழுதப்பட்டுள்ளது.
ஆளுநர், ஏற்கெனவே
ஏறாவூர் பொதுச் சந்தையை
‘ஏறாவூர் சிங்களச் சந்தை’
எனக் குறிப்பிட்டு, ஏறாவூர்
நகர சபைக்கு கடிதம்
அனுப்பியிருந்ததும்
அது ஆளுநரது
உத்தியோக பூர்வவலைத்
தளத்தில் வெளியாகி
பெரும் சர்ச்சையை
ஏற்படுத்தியவுடன்
ஆளுநர் அந்த வார்த்தைப்
பிரயோகத்தை மாற்றிக்
கொண்டதும் இங்கு
குறிப்பிடத்தக்கது.


No comments:

Post a Comment