இந்தியாவிலிருந்து இறக்குமதி செய்யப்பட்ட, 8 இலட்சம் முட்டைகள், முத்துராஜவலையில் உள்ள கைத்தொழில் வலயத்தில் வைத்து, வெதுப்பக உரிமையாளர்களுக்கு இன்று வழங்கப்பட்டுள்ளன.
நாடளாவிய ரீதியில், பாரியளவில் வெதுப்பக தொழிற்துறையை முன்னெடுக்கும், 10 வெதுப்பக உரிமையாளர்கள், இதன்போது முட்டைகளைப் பெற்றுக்கொண்டுள்ளனர்.
இதற்காக அவர்கள், முன்கூட்டியே பணத்தை செலுத்தியுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
No comments:
Post a Comment