By: Dr Ziyad A.I.A
முன்னாள் England மகளிர் அணி கிரிக்கெட் வீராங்கனை Sarah Tylor
தனது Partner பெண்ணான Diana கருத்தரித்திருப்பதாகவும் தானும் அதில் பங்களிப்ப்தையிட்டு மகிழ்ச்சி அடைகிறேன்; நானும் அவளும் தாயாகப்போகிறோம் என்று வெளியிட்ட Tweet Western மீடியாக்கள் முதல் உள்ளூர் Mediaக்கள் வரை பரபரப்பாக பகிரப்படுகிறது.
கமெண்ட் பண்ணும் பலரும் கேட்கும் கேள்வி
எப்படிடா⁉️
விஞ்ஞான ரீதியில் பெண்கள் இருவர் சேர்ந்து குழந்தை பெற்றெடுக்க முடியுமா⁉️
என்றால் "இல்லை" என்பதே பதில்.
ஒரு குழந்தை உருவாக பெண்ணின் கரு முட்டையும் (அதிலிருந்து X), ஆணின் விந்தும் அதிலிருந்து X or Y உடன் 23 நிறமூர்த்தங்கள்) சேர்ந்தே கருக்கட்ட வேண்டும்.
நவீன விஞ்ஞான வளர்ச்சி அதனை கருப்பைக்கு வெளியேயும் நிகழ்த்த சாத்தியப்படுத்தியிருக்கிறது. அதனையே In Vitro Fertilization (IVF) என்கிறோம்.
ஆக இந்த இருவரும் எப்படி தயாகின்றனர்.
மேலைத்தேய நாடுகளில் ஆண்கள் இருவர் , பெண்கள் இருவர் சேர்ந்து வாழ்தல் சாதாரணமாக நிகழ்கிறது.
இதில் சேர்ந்து வாழும் இரு பெண்கள் தமக்கு குழந்தை வேண்டும் என கருதினால்:
✅ 01. குழந்தை ஒன்றை தத்தெடுத்து வளர்க்கலாம்.
✅ 02. அல்லது இருவரில் ஒருவர் Donor விந்தணு மூலம் கருத்தரிக்கலாம்.
✅ 03. இருவரில் ஒருவரின் கருமுட்டையை +Donor விந்தணுவுடன் கருக்கட்ட செய்து அதனை மற்ற (or வேறொரு) பெண்ணின் கருப்பையில் செலுத்தி பிள்ளையை பெற்றெடுக்கலாம்.
இங்கே கருத்தரித்தலுக்கு தேவையான ஆண் விந்துக்கள் Donors (#VickyDonor/ #தாராளபிரபு க்கள்) மூலம் பெறப்படும்.
அந்த Donors தெரிந்தவர்களாகவோ, தெரியாதவர்களாகவோ (Anonymous) ஆக இருக்கலாம்.
இங்கே உள்ள பிரச்சினை ஒரு பிள்ளை பிறக்கும்போது கருக்கட்ட காரணமான கரு முட்டை (தாய்)யினதும், விந்து (தந்தை)யினதும் பரம்பரை இயல்புகளை கொண்டிருக்கும்.
இதனால் Sperm Donor தெரிவு செய்யும்போது இரத்த உறவு அல்லது நெருங்கிய நண்பரின் விந்தணுக்கள் தானமாக பெறபாபட்டு அது Anonymous ஆக பேணப்படும். (இதற்கு பல சட்டங்கள் உண்டு.)
இங்கே, இருக்கும் Twist Diana என்ற பெண் கருத்தரிக்க Donorஇன் விந்தணுக்களும் கிரிக்கெட் வீராங்கனை Sarah வின் கருமுட்டையும் பயன்படுத்தப்பட்டுள்ளது.
(3 ஆவதாக சொல்லப்பட்ட முறை)
இங்கே Diana வாடகைத் தாயாக (surrogate mother) செயற்படுகிறார்.
(இது போன்ற ஒரு வாடகை தாய் மூலமே நயன்தாரா-விக்னேஷ் சிவன் குழந்தை கிடைத்ததாக சொல்லப்படுகிறது.)
இதனாலேயே Sarah Tylorஅவரது Tweet இல் I am so happy to be part of it X என்று அந்த Xஐ Highlight பண்ணி காட்டியுள்ளார்.
Disclaimer: இப்பதிவு இந்த செய்தியின் பின்னால் உள்ள விஞ்ஞானத்தை விளக்கப்படுத்தவே எழுதப்பட்டது. இந்த செயலுக்கு ஆதரவளிக்கவோ, தனிப்பட்டவர்களை விமர்சிப்பதற்காகவோ அல்ல. கலாச்சார காவலராகள் & நவீன சிந்தனைவாதிகள் என்று சொல்லிக் கொண்டு திரிபவர்கள் ஓரமாய் விளையாடவும்.
By: Dr Ziyad Aia
No comments:
Post a Comment