Recent Posts

Search This Blog

வீடொன்றின் மலசலக்கூடத்துக்குள் படுத்திருந்து வீட்டில் உள்ளவர்களுக்கு அதிர்ச்சி கொடுத்த சிறுத்தை... #இலங்கை

Saturday, 25 February 2023


நாயை வேட்டையாடுவதற்காக வந்த சிறுத்தையொன்று, வீடொன்றின் மலசலக்கூடத்துக்குள் சிக்கிக்கொண்ட சம்பவம் ஹட்டன்- ஹெரோல் தோட்டத்தில் பதிவாகியுள்ளது.

இன்று (26) அதிகாலை இச்சம்பவம் இடம்பெற்றுள்ளது.

குறித்த வீட்டின் உரிமையாளர் அதிகாலை மலசலக்கூடத்துக்கு சென்ற போது, அங்கு சிறுத்தைக் குட்டியொன்று பதுங்கியிருப்பதை அவதானித்து, அதனை உள்ளே வைத்து பூட்டிவிட்டு பொலிஸாருக்கு அறிவித்துள்ளார்.

சிறுத்தையை அங்கிருந்து மீட்பதற்காக நல்லதண்ணி வனஜீவராசிகள் திணைக்களத்துக்கு அறிவித்துள்ளதாக ஹட்டன் பொலிஸார் தெரிவித்தனர்.

இதேவேளை ஹெரோல் தோட்டத்தில் சிறுத்தைகளின் நடமாட்டம் அதிகரித்துள்ளதுடன் அத்தோட்டத்தில் உள்ள நாய்களும் சிறுத்தைகளால் வேட்டையாடப்படுவதாக தொழிலாளர்கள் தெரிவித்தனர்.


No comments:

Post a Comment