Recent Posts

Search This Blog

மகிந்த் ராஜபக்சவை பிரதமராக்க நாம் எவ்வித முயற்சிகளையும் முன்னெடுக்கவில்லை - இது எம்முடன் இருந்து வெளியேறி அரசியல் அநாதையானவர்கள் பரப்பும் பொய்யான கதைகள்.

Saturday, 25 February 2023


(ஆர்.ராம்)

பிரதமரை மாற்றுவது தொடர்பில் எவ்விதமான முயற்சிகளையும் நாம் முன்னெடுக்கவில்லை. எமது கட்சியிலிருந்து வெளியேறியவர்கள் மூன்றாந்தர அரசியல் செய்கின்றனர் என்று பொதுஜனபெரமுனவின் பொதுச்செயலளார் சகர காரியவசம் தெரிவித்துள்ளார்.

பிரதமராக மீண்டும் மஹிந்த ராஜபக்ஷவை நியமிப்பதற்கு பொதுஜனபெரமுனவினர் முயற்சிகளை முன்னெடுப்பதாக பேராசிரியர் சன்ன ஜயசுமான தெரிவித்த கருத்து தொடர்பில் பதிலளிக்கையிலேயே அவர் மேற்கண்டவாறு தெரிவித்தார்.

அவர் மேலும் தெரிவிக்கையில்,

பொதுஜனபெர முனவில் இருந்து வெளியேறியுள்ள ஒரு அணியினர் தற்போது அநாதரவாக நிற்கின்றார்கள். அவர்கள் தமது அரசியலை வளர்த்துக்கொள்ளவும், அன்றாட பிரபல்யத்துக்காகவும் வெவ்வேறு சூட்சுமங்களை கையாள்கின்றார்கள். அதிலொன்று தான், மஹிந்த ராஜபக்ஷவை பிரதமராக்குவதற்கு முனைகின்றோம் என்ற கருத்தாகும்.

அவர் தமது அரசியலில் இருப்பு கேள்விக்குறியாகிவுடன், கட்சியும், அதன் மூத்த அங்கத்தவர்களையும் வைத்து புனைகதைகளை வெளிப்படுத்திக் கொண்டிருக்கின்றார்கள்.

அவர் தமது இயலாமையினால், மூன்றாந்தரமான அரசியல் செய்து கொண்டிருக்கின்றார்கள்.

ஆகவே, சன்ன ஜனசுமான எம்.பி. இடத்தில் யாராவது அணுகியிருந்தால் அதுபற்றிய முழுமையான விபரங்களை வெளியிட வேண்டும் என்றர்


No comments:

Post a Comment