Recent Posts

Search This Blog

வீதிகளில் நெல் உலரவிடுவதால் இடம்பெற்ற விபத்தில் மற்றுமொரு மரணம்.. ஆறு பிள்ளைகளின் தந்தை பலி.

Sunday, 26 February 2023


கிளிநொச்சி வீதிகளில் நெல் உலரவிடுவதால் இடம்பெற்ற இரண்டாவது விபத்தில் ஆறு பிள்ளைகளின் தந்தை பலியாகியுள்ளார்.


பரந்தன் - முல்லைத்தீவு வீதியில் கண்டாவளை சந்திக்கு அருகில் நேற்று முன்தினம் (25) பிற்பகல் இடம்பெற்ற விபத்தில், வட்டகச்சியைச் சேர்ந்த கதிரவேலு யாதவராசா என்ற 58 வயதுடையவர் சம்பவ இடத்தில் உயிரிழந்துள்ளார்.


நெல்லை வீதியில் உலர விடுவதால், அப்பகுதியில் போக்குவரத்து நெரிசல் அடிக்கடி ஏற்பட்டு வருகிறது.


இந்நிலையில், புளியம்பொக்கணையில் இருந்து கண்டாவளை நோக்கி சைக்கிளில் பயணித்தவர் மீது, பரந்தனில் இருந்து புதுக்குடியிருப்பு நோக்கி பயணித்த லொறி மோதியதாலேயே இவ்விபத்து இடம்பெற்றுள்ளது கடந்து சில வாரங்களுக்கு முன்னர், பரத்தன் - பூநகரி வீதியிலும் நெல் உலரவிட்டதன் காரணமாக இடம்பெற்ற விபத்தில், இளம் குடும்பஸ்தர் பலியாகியிருந்தாார்.


அத்தோடு, இக்காரணத்தால் இடம்பெறும் விபத்துகளால், மேலும் சிலர் காயமடைந்து வைத்தியசாலைகளில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்


No comments:

Post a Comment