பிலியந்தலை - கொழும்பு வீதியின் பேலியகொட பிரதேசத்தில் தனியார் பஸ்ஸொன்றுடன் மோட்டார் சைக்கிளில் மோதி விபத்துக்குள்ளானதில் ஒருவர் உயிரிழந்துள்ளார்.
யக்கலமுல்ல - பொல்பாகொட பிரதேசத்தில் வசித்து வந்த 33 வயதுடைய திருமணமான ஒருவரே விபத்தில் உயிரிழந்துள்ளார்.
சம்பவத்தின் போது பலத்த காயமடைந்த மோட்டார் சைக்கிள் சாரதி முச்சக்கரவண்டியால் வேரஹெர கொத்தலாவல பாதுகாப்பு வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டு மேலதிக சிகிச்சைக்காக கொழும்பு தேசிய வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டதன் பின்னர் உயிரிழந்துள்ளார்.
பஸ் சாரதி கைது செய்யப்பட்டுள்ளதுடன், கெஸ்பேவ நீதவான் நீதிமன்றில் முன்னிலைப்படுத்த நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டுள்ளன
No comments:
Post a Comment