15 வயது சிறுமியை பணத்திற்காக வர்த்தகர்கள் உள்ளிட்ட பல்வேறு நபர்களுக்கு விற்பனை செய்த சம்பவம் ஒன்று பாணந்துறை பிரதேசத்தில் பதிவாகியுள்ளது.
சிறுமியின் தாய் மற்றும் சிறுமியை துஷ்பிரயோகம் செய்ததாக கூறப்படும் நான்கு பேரும் கைது செய்யப்பட்டதாக பாணந்துறை வடக்கு பொலிஸார் தெரிவித்தனர்.
கைது செய்யப்பட்டவர்களில் 84 வயதுடைய ஒருவரும் அடங்குவதாக கூறப்படுகிறது.
பாணந்துறை, கெசல்வத்த மற்றும் கோரக்கன பிரதேசங்களைச் சேர்ந்தவர்களே இவ்வாறு கைது செய்யப்பட்டுள்ளனர்.
பணம் கொடுத்து சிறுமியை அழைத்துச் சென்ற ஏனையவர்களை கண்டறிய பொலிசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
இந்நிலையில், தற்போது குறித்த சிறுமி வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.
பொலிஸ் விசாரணையில், அப்பகுதியைச் சேர்ந்த தொழிலதிபர் ஒருவர், சிறுமியின் தாயை ஏமாற்றி பணம் கொடுத்து, சிறுமியை துஷ்பிரயோகத்திற்கு
உட்படுத்தியதோடு, ஏனைய சிலருக்கு விற்பனை செய்துள்ளமை தெரியவந்துள்ளது.
சந்தேகத்திற்கிடமான வர்த்தகர் பிரதேசத்தில் காணாமல் போயுள்ளதாகவும், அவரைக் கண்டுபிடிக்க விசாரணைகள் மேற்கொள்ளப்பட்டு வருவதாகவும் பொலிஸார் தெரிவிக்கின்றனர்.
சம்பவம் தொடர்பில் 42, 45, 54 மற்றும் 84 வயதுடைய சந்தேகநபர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர்
No comments:
Post a Comment