Recent Posts

Search This Blog

கொழும்பு – கிராண்ட்பாஸில் இடம்பெற்ற விபத்து.. மது போதையில் வேகமாக காரை செலுத்தி வீதியில் இருந்தவர்கள் மீது மோதியதில் ஒருவர் பலி.

Friday, 27 January 2023


கொழும்பு – கிராண்ட்பாஸில் நேற்றிரவு இடம்பெற்ற வாகன விபத்தில் ஒருவர் உயிரிழந்துள்ளார்.

பேஸ்லைன் வீதியின் ஒருகொடவத்தை சந்திக்கு அருகில், கொழும்பிலிருந்து கண்டி நோக்கிப் பயணித்த கார் ஒன்று நிறுத்தி வைக்கப்பட்டிருந்த 02 மோட்டார் சைக்கிள்களுடன் மோதியுள்ளது.

இதன்போது தூக்கியெறியப்பட்ட மோட்டார் சைக்கிள்களில் ஒன்று வீதி போக்குவரத்து ஒழுங்குபடுத்தல் கடமைகளில் ஈடுபட்டிருந்த பொலிஸ் கான்ஸ்டபிள் ஒருவர் மீது மோதியுள்ளது.

இதனையடுத்து, விபத்தில் பலத்த காயமடைந்த மோட்டார் சைக்கிள் ஓட்டுநர்கள் இருவரும் பொலிஸ் கான்ஸ்டபிளும் கொழும்பு தேசிய வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்ட பின்னர், மோட்டார் சைக்கிள் ஓட்டுநர் ஒருவர் உயிரிழந்துள்ளார்.

வெல்லம்பிட்டியவைச் சேர்ந்த 52 வயதானவரே விபத்தில் உயிரிழந்துள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.

விபத்துடன் தொடர்புடைய காரின் சாரதி கைது செய்யப்பட்டுள்ளார். குறித்த நபர் மது போதையில் வாகனம் செலுத்தியமை கண்டறியப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.

கிராண்ட்பாஸ் பொலிஸார் மேலதிக விசாரணைகளை முன்னெடுத்து வருகின்றனர்.


No comments:

Post a Comment