
உயர்தரப் பரீட்சை நடைபெறவுள்ள பெப்ரவரி 17ஆம் திகதி வரையான காலப்பகுதியில் மின்வெட்டுக்கு அனுமதி வழங்கப்படவில்லை என்பதால், அங்கீகரிக்கப்படாத மின்வெட்டுகளை எதிர்கொள்ள நேரிடும் பட்சத்தில் பொதுப் பயன்பாட்டு ஆணைக்குழுவில் எழுத்து மூலம் முறைப்பாடு செய்யுமாறு ஆணைக்குழு பொதுமக்களை கோரியுள்ளது.
0775687387 என்ற தொலைபேசி இலக்கத்திற்கு WhatsApp ஊடாகவோ அல்லது consumers@pucsl.gov.lk என்ற மின்னஞ்சல் முகவரிக்கு அல்லது 0112392641 என்ற தொலைநகல் இலக்கத்திற்கோ முறைப்பாடுகளை அனுப்புமாறு மேற்படி ஆணைக்குழுவின் தலைவர் திரு.ஜானக ரத்நாயக்க மேலும் கேட்டுக்கொள்கிறார்.
No comments:
Post a Comment