Recent Posts

Search This Blog

நாம் வெற்றி பெற்றால் எங்கள் கட்சி்த் தலைவர் கெளரவ ரவூப் ஹக்கீம் அவர்களின் வழிகாட்டுதலில் ஊழலற்ற, தூய்மையான, சுய நலமற்ற அரசியலை முன்னெடுப்போம் ; யடவத்த பிரதேச தராசு சின்ன வேட்பாளர்களின் தேர்தல் அறிக்கை.

Friday, 27 January 2023
அஸ்ஸலாமு அலைக்கும்

எமது நிககொள்ள வாழ் சொந்தங்களுக்கு,

தூய்மையான, சுய நலமற்ற அரசியலை நோக்கி எமதூரை முன் கொண்டு செல்லும் பொருட்டு
உங்களோடு கொஞ்சம் பேசுகிறோம்.

எதிர் வருகின்ற பிரதேச சபைத் தேர்தலில் யடவத்த பிரதேச சபைக்காக சிரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் சார்பாக ஐக்கிய தேசிய கூட்டனியின் தராசு சின்னத்தில், யடவத்த பிரதேச சபையின் 10 தொகுதிகளுக்கும் எமது கட்சியிலிருந்து நாம்19 சகோதரர்கள் ஒன்றாகக் களமிறங்கி உள்ளோம்.

இன்ஸா அல்லாஹ்

இது ஒரு உன்னத நோக்கத்தோடு,
எது வித பதவி ஆசைகளோ, அரசியலில் சம்பாதிக்கும் எண்ணமோ அற்ற, ஊரை முன்னிருத்தி பல பெரியவர்கள் வாலிபர்களின் ஆலோசணையின் பின் எடுக்கப் பட்ட முடிவாகும்.

இந்த சந்தர்ப்பத்தில்
எமது ஊர் மக்களிடம் சில வாக்குறுதிகளையும் முன் வைக்க விரும்புகிறோம்.

1 - வெற்றி தோல்வி என்பது அல்லாஹ் தருவது.
இன்ஸா அல்லாஹ் எமது வெற்றியின் பின், எங்களால் எதிர் பார்த்த பலன் கிடைக்கா விடின் அல்லது நாம் தொடர்ந்தும் பதவியில் இருக்க பொருத்தமில்லை என மக்கள் கருதுமிடத்து, அல்லது சொந்தக் கட்சிக்கு துரோகம் செய்யுமிடத்து பிரதேசசபை உறுப்பினர் என்ற பதவியிலிருந்து எம்மை பதவி நீக்கம் செய்யும் அதிகாரத்தை மக்களுக்கு வழங்குவதோடு, திகதி இடப் படாத ராஜினாமாக் கடிதங்கள் எமது கட்சித் தலைமை, மற்றும் எமது ஊர் தலைமையிடம் தேர்தலுக்கு முன் வழங் படும் என்பதை தெரிவித்துக் கொள்கிறோம்.

2 -,எமது உறுப்பினர்களுக்கு பிரதேச சபை உறுப்பினர் என்ற ரீதியில் பகிர்ந்தளிக்கப் படும் அபிவிருத்தி வேலைத்திட்டங்களின் நிதி விடயங்கள் ஊரின் பொது அமைப்பொன்றின் மேற் பார்வையின் கீழ் மேற்கொள்ளப் படுவதற்கான நடவடிக்கை எடுக்கப் படும்

3- இன்ஸா அல்லாஹ் வெற்றியின் பின் பிரதேச சபை உறுப்பினர் என்ற வகையில் வழங்கப் படும் கொடுப்பணவுகளின் ஒரு தொகுதி மாதம் தோறும் ஊரின் பொது வேலைக்காக பொது அமைப்பொன்றிடம் கையளிக்கப் படும்

4.- ஊழலற்ற, சுயலாபமற்ற ஒரு அரசியல் நடைமுறை உறுதிப் படுத்தப்படும்..

5- ஊரின் பெளதீக சுற்றாடல் வள அபிவிருத்தி மற்றும் பாடசாலை அபிவிருத்தி போன்ற வற்றுக்கு முன்னுரிமை அளிக்கப் படுவதோடு இவற்றுக்காக எங்கள் கட்சி்த் தலைவர் கெளரவ ரவூப் ஹக்கீம் அவர்களின் வழி காட்டுதலில் மத்தியில் ஆட்சி அமைக்க இருக்கின்ற கட்சியுடனும் இனைந்து செயற்பட நடவடிக்கை மேற்கொள்ளப்படும்

எமது மக்களே
இன்ஸா அல்லாஹ் எமது ஊர் மக்களின் ஏகோபித்த ஆதரவு எமக்கு வழங்கப்படுமிடத்து நிககொள்ள வட்டாரத்தை வென்ரெடுப்பதோடு, யடவத்த மெதியாபொல வட்டாரத்தையும் வென்றெடுக்கும் சாத்தியமும் அதிகமாக காணப் படுகிறது. எமது கட்சியில் போட்டியிடும் மாற்று இன சகோதரர்கள் எங்களுக்கு பூரண ஆதரவு தருவதோடு மஹவல தொகுதியையும் வெல்லக் கூடிய வாய்ப்புடன் ஒரு போனஸ் ஆசனத்தையும் பெற முடியுமாக இருக்கும்.

இது எமது ஊர், எமது மக்கள். நாம் இங்கே வாழ்கிறோம், இங்கே எமது பிள்ளைகள் படிக்கிறார்கள். இந்த ஊரை முன்னேற்றப் பாதையில் கொண்டு செல்ல வேண்டிய தேவை எமக்கிருக்கிறது.

எனவே

சகல இன மக்களோடும், தூய்மையான அரசியலை நோக்கி சேர்ந்து பயணிக்கும் இந்தப் பயணத்தில் எமது ஊர் மக்களின் அமோக ஆதரவை எதிர் பார்க்கிறோம்.


நன்றி.

ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் சார்பாக.

ஐக்கிய தேசிய கூட்டமைப்பு

நிககொள்ள தொகுதியின்

ஆர் டி ரினோஸ் முகமத்
1 காலித் இப்னு முகமத் ரிப்கான்
2 சிசிர திசாநாயக

யடவத்த மெதியாபொல சார்பாக

நிசாம்தீன் ரிப்கான்
1 சலீம்தின்
ரஹ்மதுல்லாஹ்

செலகம தொகுதி சார்பாக

அமீர் பஸ்ரின்


No comments:

Post a Comment