(NFGGஊடகப் பிரிவு)
எதிர்கால தேர்தல்கள் குறித்து நல்லாட்சிக்கான தேசிய முன்னணி (NFGG) மற்றும் ஐக்கிய மக்கள் சக்தி (SJB) சந்திப்பு!
எதிர்வரும் தேர்தல்களில் எவ்வாறான நகர்வுகளை மேற்கொள்வது என்பது குறித்து, நல்லாட்சிக்கான தேசிய முன்னணிக்கும் (NFGG) ஐக்கிய மக்கள் சக்திக்குமடையிலான (SJB) முதற்கட்டப் பேச்சுவார்த்தை நேற்று வியாழக்கிழமை SJB அலுவலகத்தில் நடைபெற்றது.
இக்கலந்துரையாடலில் ஐக்கிய மக்கள் சக்தியின் செயலாளர் ரஞ்சித் மத்தும பண்டார MP மற்றும் பாராளுமன்ற உறுப்பினர் முஜீபுர் றஹ்மான் ஆகியோரும்,
நல்லாட்சிக்கான தேசிய முன்னணி சார்பாக அதன் பிரதித் தவிசாளர் பொறியியலாளர் அப்துர் றஹ்மான், தேசிய அமைப்பாளர் முஜீபுர் றஹ்மான், தலைமைத்துவ சபை உறுப்பினர் எம்.ஜே.எம். மன்ஸுர் (முன்னாள் அதிபர்) ஆகியோரும் கலந்து கொண்டனர்.
இதன்போது, உள்ளுராட்சி மன்றங்களில் நாடளாவிய ரீதியில் அங்கம் வகிக்கும் NFGG உறுப்பினர்களின் அரசியல் செயற்பாடுகள் குறித்து விரிவாகக் கலந்துரையாடப்பட்டது.
எந்தெந்தப் பிரதேசங்களில் எவ்வகையான தேர்தல் நகர்வுகளை முன்னெடுத்தல். தற்போதைய வட்டாரப் பிரிப்பு முறையில் தேர்தல் நடைபெற்றால் அதனை எதிர் கொள்வதற்கான சிறந்த வழிமுறைகள் என்ன என்ன? விகிதாசார முறையில் தேர்தல் நடைபெற்றால் அதன் நகர்வுகள் எவ்வாறு இருக்கும் என்பது குறித்தும் கலந்துரையாடப்பட்டது.
இது தொடர்பான விரிவான அடுத்த கட்டப் பேச்சுவார்த்தை அடுத்துவரும் ஒருசில தினங்களில் நடைபெறும் எனவும் தீர்மானிக்கப்பட்டது.
No comments:
Post a Comment