இலங்கையின் பாதாள உலக முக்கியஸ்தர் மொஹமட் நஜிம் மொஹமட் இம்ரான் (கஞ்சிபானி இம்ரான்) தமிழகத்திற்கு தப்பிச் சென்றுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
இந்திய புலனாய்வு தகவல்களை மேற்கோள்காட்டி “த ஹிந்து” வெளியிட்டுள்ள செய்தியில் இவ்வாறு தெரிவிக்கப்பட்டுள்ளது.
கஞ்சிபானி இம்ரான் இலங்கை நீதிமன்றத்தினால் பிணையில் விடுவிக்கப்பட்ட நிலையில், அவர் கடந்த சனிக்கிழமை இராமேஸ்வாரத்திற்குள் பிரவேசித்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.
இதேவேளை கொலைகள் மற்றும் திட்டமிட்ட பல்வேறு குற்றங்களுக்காக இலங்கை அதிகாரிகளால் தேடப்படும் இம்ரான், 2019 இல் டுபாயில் கைது செய்யப்பட்டு இலங்கைக்கு நாடு கடத்தப்பட்டிருந்தார்.
அத்ற்கமைய இராமநாதபுரம் கடலோர மாவட்டங்களில் கண்காணிப்புப் பணிகளை மேற்கொள்ளுமாறும் தமிழக உளவுத்துறை, மாநிலம் முழுவதும் உள்ள உயர் பொலிஸ் அதிகாரிகளுக்கு பணிப்புரை விடுத்துள்ளமை குறிப்பிடத்தக்கது.
No comments:
Post a Comment