Recent Posts

Search This Blog

போதைப் பொருளை ஒழிக்க கிண்ணியாவில் விழிப்புணர்வு நிகழ்வு

Sunday, 1 January 2023


ஹஸ்பர்_
திருகோணமலை கிண்ணியா பகுதியில் போதைப் பொருள் பாவனையை ஒழிக்க கோரிய பேரணி ஊர்வலமொன்று இன்று (01) காலை இடம் பெற்றது.

குறித்த பேரணியானது குட்டிக்கராச்சி சந்தியில் இருந்து டி சந்தி வரை பேரணியாக சென்றதுடன் புஹாரி சந்தியில் கிண்ணியா அறபா மகாவித்தியாலய மாணவர்களால் போதை ஒழிப்பு வீதி நாடகமும் ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது.

"போதைப் பொருள் பாவனையற்ற சமுதாயத்தை உருவாக்க ஒன்றுபட வாருங்கள்" எனும் தொனிப்பொருளின் கீழ் இடம் பெற்ற விழிப்புணர்வு ஊர்வலத்தினை கிண்ணியா டைட்டனிக் விளையாட்டு கழகம் மற்றும் மரத்தடி இதனை ஏற்பாடு செய்திருந்தனர்.

போதைப் பொருள் பாவனையின் அதிகரிப்பினை ஒழிக்க இந்த விழிப்புணர்வு ஊருவலம் இடம் பெற்றது. இதில் நூற்றுக் கணக்கான இளைஞர்கள் கலந்து கொண்டதுடன் போதை ஒழிப்பு தொடர்பான பதாகைகளை ஏந்தியவாறு கோசங்களை எழுப்பியும் பேரணியாக சென்றனர்.

இதில் கிண்ணியா பிரதேச செயலாளர் எம்.எச்.ஹனி மற்றும் இளைஞர் யுவதிகள் ,சமூக ஆர்வலர்கள் என பலர் கலந்து கொண்டனர்.





No comments:

Post a Comment