மோட்டார் சைக்கிள் மூலம்
பாடசாலைக்குச் செல்லும்
மாணவர்களுக்கு பாதுகாப்பு
தலைக்கவசங்களை வழங்கும்
சமூக செயற்பாடொன்று
ஹட்டன் பொலிஸாரால்
முன்னெடுக்கப்பட்டது.
இதற்கமைய, ஹட்டன்
பிரதேசத்தில் பாதுகாப்ப
தலைக்கவசங்கள் இன்றி,
மோட்டார் சைக்கிளில்
பாடசாலைக்குச் செல்லும்
மாணவர்களுக்கு இலவசமாக
தலைக்கவசங்கள் வழங்கும்
நடவடிக்கை நேற்று முன்தினம்
(23) முன்னெடுக்கப்பட்டது.
ஹட்டன் பிரதேசத்திலுள்ள
தமிழ், சிங்கள பாடசாலைகளில்
கல்வி கற்கும்அதிகமான
பிள்ளைகள், தலைக்கவசம்
இன்றி, பாடசாலைக்கு மோட்டார சைக்கிளில்
அழைத்து வரப்படுகின்றமை
தொடர்பில் ஹட்டன்
போக்குவரத்து
பொலிஸார் ஆராய்ந்து
இந்த செயற்பாட்டை
முன்னெடுத்திருந்தனர்.
ஹட்டன் நகரிலுள்ள
தனியார் காப்புறுதி நிறுவனம்
ஒன்றின் நிதி உதவியுடன்,
மாணவர்களுக்கு இலவசமாக
தலைக்கவசம் வழங்கி
வைக்கப்பட்டது.
No comments:
Post a Comment