Recent Posts

Search This Blog

9 A பெற்ற மாணவனின் உடல் மீது மண்ணெண்ணெய் ஊற்றி தீ வைப்பு.... கண்டி பிரதேசத்தில் சம்பவம்.

Monday, 28 November 2022


கண்டி பிரதேசத்தில் மாணவரொருவரின் உடல் மீது, மண்ணெண்ணெய் ஊற்றி தீ வைத்தவர்களை தேடி காவல்துறை விசாரணைகளை முன்னெடுத்துள்ளனர்.

சம்பவத்தில் பலத்த காயமடைந்த அவர் கண்டி தேசிய வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.

கண்டி, அம்பிட்டிய - பல்லேகம பிரதேசத்தைச் சேர்ந்த மாணவரொருவரே சம்பவத்துக்கு முகங்கொடுத்துள்ளார்.

தான் பரீட்சையில் 9 விசேட சித்திகள் பெற்றதை தமது பாட்டியிடம் கூறிவிட்டு, தந்தையுடன் நேற்றுமுன்தினம் வீடு திரும்பிக்கொண்டிருந்தபோது, இனந்தெரியாத சிலர் குறித்த மாணவனின் உடல்மீது மண்ணெண்ணெய் ஊற்றி தீ வைத்துள்ளதாக காவல்துறையினர் தெரிவித்துள்ளனர்.

அம்பிட்டிய பிரதேசத்தில் பல்வேறு குற்றச்செயல்களை மேற்கொள்ளும் நபர்களே இந்தச் செயலைச் செய்திருக்கலாம் என காவல்துறையினர் சந்தேகிக்கின்றனர்.


No comments:

Post a Comment